பொது செய்தி

தமிழ்நாடு

கண்டிப்பு! மக்களுக்கு சேவையாற்றுவோரை அனுமதியுங்கள் ‛'தினமலர்' நாளிதழை காட்டி முதல்வர் அறிவுரை!

Updated : மார் 27, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (12+ 29)
Share
Advertisement
கண்டிப்பு!,மக்களுக்கு,சேவையாற்றுவோரை,அனுமதியுங்கள்‛ 'தினமலர்' நாளிதழை காட்டி ,முதல்வர், அறிவுரை!

அத்தியாவசிய சேவையில் ஈடுபட்டிருப்போர், பொது சேவை செய்வோர், நாளிதழ் வினியோகம் செய்வோர் மீது, போலீசார் தடியடி நடத்தியது குறித்து, நேற்று நம் நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. இதை சுட்டிக்காட்டி, 'ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட வேண்டாம்' என, போலீஸ் அதிகாரிகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில், 'கொரோனா' நோய் பரவலை தடுக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தினமும் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து, அவ்வப்போது நோய் தடுப்புக்கு, தேவையான உத்தரவுகளை, முதல்வர் பிறப்பித்து வருகிறார்.அரசின் வேண்டுகோளை ஏற்று, பொது மக்கள் வீடுகளில் முடங்கினர்.

இளைஞர்கள் உள்ளிட்ட சிலர் வழக்கம்போல், ஊர் சுற்ற கிளம்பினர்.அவர்களை கட்டுப்
படுத்த வேண்டிய போலீசார், சாலையில் வந்த அனைவரையும், லத்தியால் தாக்கினர். அதிகாலை செய்தித்தாள் வினியோகிக்க சென்ற, இளைஞர்களையும் தாக்கினர். மக்களுக்காக சேவையாற்றும், பத்திரிகை துறையை சேர்ந்த ஊழியர்களையும், மருத்துவர்களையும் கூட தாக்கினர். யார் என்று விசாரிக்காமலே, பல இடங்களில், போலீசார் கடுமையாக நடந்து கொண்டனர்.

இது, பொது மக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 'வீணாக ஊர் சுற்றுவோரிடம் மட்டும், போலீசார் கடுமை காட்ட வேண்டும்; அத்தியாவசிய தேவைக்காக செல்வோரை, தடுக்க கூடாது' என, கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக, நேற்று நமது நாளிதழில், தலைப்பு செய்தியாக, படத்துடன் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், நேற்று முதல்வர், இ.பி.எஸ்., சென்னை, தலைமைச் செயலகத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள், சுகாதாரத் துறை துணை இயக்குனர்கள் ஆகியோருடன், கலந்தாய்வு நடத்தினார்.அப்போது, போலீஸ் அதிகாரிகளிடம் பேசிய முதல்வர், தன் கையிலிருந்த, 'தினமலர்' நாளிதழ் செய்தியை
சுட்டிக்காட்டி கூறியதாவது:

இதுபோன்று நடந்து கொண்டால், பொது மக்களிடம் கெட்ட பெயர் ஏற்படும். மக்களை காக்க, நாம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும்
வகையில், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மிகவும் கடுமையாக நடந்து கொண்டால், அரசுக்கு கெட்ட பெயர் தான் ஏற்படும்.தேவையின்றி, வீட்டை விட்டு வெளியில் வருவோர் மீது, நடவடிக்கை எடுங்கள். மக்களின் அத்தியாவசிய தேவையை நிறைவேற்ற செல்வோரை அனுமதியுங்கள்.இவ்வாறு, முதல்வர், போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின், சாலைகளில் யாரை எல்லாம்
அனுமதிக்க வேண்டும் என்பது குறித்து, முதல்வர் விரிவான அறிவிப்பு வெளியிட்டார்.
அதனடிப்படையில், டி.ஜி.பி., திரிபாதி, மாவட்ட எஸ்.பி.,க்களுக்கும், மாநகர கமிஷனர்களுக்கும், போலீசார்எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என, சிலஉத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.


கையில் லத்தி எடுக்க தடை!



முதல்வர் உத்தரவை தொடர்ந்து, போலீசாருக்கு உயர் அதிகாரிகள், அறிவுரைகள் வழங்கி உள்ளனர். சென்னை, பூக்கடை போலீஸ் துணை கமிஷனர், ராஜேந்திரன், 'வாட்ஸ் ஆப்' ஆடியோ வழியாக, போலீசாருக்கு வழங்கியுள்ள அறிவுரைகள்:

ஊரடங்கு பணியில் உள்ள போலீசார், கையில் லத்தி வைத்திருக்கக் கூடாது. ஊரடங்கு உத்தரவு எதற்கு என, மக்களுக்கு புரியவைக்க வேண்டும். பொது மக்களை மிரட்டவோ, பயமுறுத்தவோ கூடாது; அவர்களை அடிக்க கூடாது. இவ்வாறு நடந்தால், சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும்.
பொது மக்களுக்கு விபரீதம் புரியவில்லை. அவர்களிடம் பக்குவமாக பேசி, புரியவைத்து
அனுப்புங்கள்.

கால்நடை தீவனங்களை எடுத்துச் செல்லும் வாகனங்களை விட்டு விடுங்கள். வங்கி ஏ.டி.எம்.,மிற்கு செல்வோர், அத்தியாவசிய தேவைக்காக செல்கின்றனர். கடைக்கு பொருட்கள்
வாங்க வரும் மக்களிடம், சமூக விலகல் குறித்து சொல்லுங்கள். ஒரு அடி இடைவெளி விட்டு, பொருட்கள் வாங்க அறிவுறுத்தலாம். துணிக்கடை, நகைக் கடைகள் முறையாக மூடப்பட்டுள்ளதா என, கண்காணியுங்கள். சரக்கு ஏற்றி செல்லும்

வாகனங்களை வழிமறிக்க வேண்டாம்; அதை, போக்குவரத்து காவலர்கள் பார்த்துக் கொள்வர். பொது அறிவை பயன்படுத்தினால், இது போன்ற பிரச்னைகள் வராது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


செய்தித் தாள்களை வினியோகிக்கும் ஏஜென்டுகள், லைன் பாய்கள், கடைக்காரர்களின் சேவையை பாராட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிட்டதற்கு நன்றி. பேப்பர் போடுவது ஒரு சமூக சேவை. நாட்டு நடப்புகளை மக்கள் தெரிந்து கொள்ள, அவர்களின் வீடுகளுக்கே, பேப்பரை சேர்க்கிறோம். 'பேப்பர் வாயிலாக கொரோனா பரவும்' எனக் கூறுவது தவறானது. அதனால், யாரும் பயப்பட வேண்டாம். போலீசார் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.
தேவேந்திரன்


தமிழ்நாடு செய்தித்தாள் விற்பனையாளர்கள் சங்கத் தலைவர்
-- நமது நிருபர்- -

Advertisement




வாசகர் கருத்து (12+ 29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Baskar - Paris,பிரான்ஸ்
27-மார்-202017:19:30 IST Report Abuse
Baskar சரியான வார்த்தையா .
Rate this:
Share this comment
Cancel
Baskar - Paris,பிரான்ஸ்
27-மார்-202017:14:15 IST Report Abuse
Baskar போலீசார் இல்லை என்றால் நாட்டில் நடக்கும் திருட்டு கற்பழிப்பு போன்றவைகளை தடுக்க முடியாது. பக்கத்து வீட்டுக்காரன் கூட துணைக்கு வர மாட்டான்.
Rate this:
Share this comment
Cancel
Gopi - Chennai,இந்தியா
27-மார்-202010:18:19 IST Report Abuse
Gopi கெஜ்ரிவால் செய்தது போன்று தமிழக அரசு இ-பாஸுகளை அனுமதிக்க வேண்டும். இதை பட்டயமாக அல்லது மொபைல் செயலியில் குறிப்பிட்ட நேரத்திற்கு குறிப்பிட்ட விசயத்திற்கு பயன்படும்படி செய்யலாம். QR கோடுகளை கொண்டும் இதை நடைமுறை படுத்தலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X