பொது செய்தி

தமிழ்நாடு

இயற்கை நாப்கின் பெண்களை பாதுகாக்கும்! உறுதியாக சொல்கிறார் உமா மகேஸ்வரி

Updated : மார் 27, 2020 | Added : மார் 26, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

இயற்கை மூலிகை பொருட்களாலான சானிடரி நாப்கின்களை தயாரித்து வருகிறார், எல்.உமா மகேஸ்வரி, 36. அவரிடம் பேசியதிலிருந்து...
இயற்கை மூலிகை நாப்கின்கள் தயாரிக்கும் எண்ணம் எப்படி?
சென்னை, பெரம்பூர் தான், என் சொந்த ஊர். 10ம் வகுப்பு வரை படித்து, தொடர்ந்து படிக்க வசதியின்றி, ராயபுரத்தில் உள்ள, தனியார் பல்பொருள் அங்காடியில், விற்பனை மேற்பார்வை பிரதிநிதியாக பணிபுரிந்தேன். அப்போது, மாதவிடாய் காலங்களில், சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்தியதால், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டேன்.தொடர்ந்து, உடல்நிலை சரியாகாததால், பணியை துறந்து, வீட்டில் இருந்தேன்.latest tamil news
அந்த சமயம், அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்தில் நடந்த, புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கில் பங்கேற்றேன். அதில், 28 வயது பெண் ஒருவர், சானிடரி நாப்கின் பயன்பாடால், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கர்ப்பப் பையை இழந்து, தன் சந்ததியே அழிந்துவிட்டதாக, வேதனையுடன் கூறினார்.

இதுபோல், நாடு முழுவதும், மாதவிடாய் காலங்களில், சானிடரி நாப்கின்களை பயன்படுத்தும் பெண்களில், 65 முதல், 70 சதவீதம் பேர், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக, புற்றுநோய் மைய டாக்டர்கள் தெரிவித்தனர்.இதற்கு தீர்வு காணவே, இயற்கை மூலிகை பொருட்ளாலான, சானிடரி நாப்கின்களை தயாரிக்க தொடங்கினேன்.
புழக்கத்தில் உள்ள சானிடரி நாப்கின்களால் ஏற்படும் பாதிப்புகள்?

பிளாஸ்டிக், வாசனை திரவியங்கள் மற்றும் மரக்கூழ்கள் கொண்டு, தற்போதைய சானிடரி நாப்கின்கள் தயாரிக்கப்படுகின்றன.இதில், மரக்கூழை வெள்ளையாக்க, 'குளோரைடு' பயன்படுத்தப்படுகிறது. குளோரைடு வாயிலாக, ஒரு முறைக்கு இருமுறை, பேட்கள், 'பிளீச்' செய்யப்பட்டு, அதில், 'ஜெல் பார்ம்' போடப்படுகிறது.அதிக நேரம் தாக்கு பிடிக்க, 'சோடியம் போலி அக்ரிலேட்' எனும், வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இதனால், அவற்றை பயன்படுத்தும்போது, 'டயாக்சின்' எனும் வேதிப்பொருள் வெளிப்படுகிறது. இது, புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது.


latest tamil news


மூலிகை நாப்கின்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன?
பருத்தி பஞ்சுக்குள், திரிபலா, வேப்பிலை வித்து, சோற்றுக் கற்றாழை உட்பட, ஒன்பது வகையான மூலிகை பொருட்கள் வைக்கப்படுகின்றன.மூலிகை பொருட்கள் வைக்கவும், பேட் பயன்படுத்தப்படுவதில்லை. மூலிகை பொருட்களை பயன்படுத்துவதால், ஈரப்பதம் எளிதில் உறிஞ்சப்படுகிறது.தற்போது, 260, 280 மற்றும் 320 மி.மீ., அளவுகளில், நாப்கின்கள் தயாரிக்கப் படுகின்றன. இதற்காக, தமிழக அரசின், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் நடத்துவதற்கான, அங்கீகாரமும் பெற்றுள்ளேன்.
இதன் பயன்கள் என்னென்ன?
மூலிகை நாப்கின்களில், ரசாயனப் பொருட்கள் தவிர்க்கப்படுவதால், நோய் எதிர்ப்பு சக்தி, வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது.உடலில், ஹார்மோன் சமநிலை பெறுகிறது. பாக்டீரியாவை நீக்கி, துர்நாற்றத்தை தடுக்கிறது. சாதாரண சானிடரி நாப்கின்கள் பயன்படுத்தியதால் ஏற்பட்ட எரிச்சலை குணப்படுத்துகிறது.மன அழுத்தத்தை குறைப்பதுடன், களைப்பை போக்குகிறது. வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை தொற்றுநோய், பி.சி.ஓ.டி., கட்டிகள், கர்ப்பப் பை வாய் புற்றுநோய் ஆகியவற்றால் பெண்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்கிறது.சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது. இதை, எரித்தாலும் எளிதில் சாம்பலாகிவிடும்.
மாதவிடாய் குறித்த புரிதல்கள் எப்படி உள்ளன?
பத்து ஆண்டுகளுக்கு முன் வரை, மாதவிடாய் குறித்து, பெண்களும் சரியான புரிதல் இன்றி இருந்தனர். இதனால், பலர் குழந்தை பேறு இன்றி தவித்தனர். பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், பி.சி.ஓ.டி., மற்றும் பி.சி.ஓ.எஸ்., பிரச்னைகளே குழந்தை பேரின்மைக்கு காரணம் என, தெரிய வந்தது.

நாளடைவில், பெரும்பாலான பெண்கள், விழித்து, இயற்கை மூலிகை நாப்கின்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியதால், தற்போது, குழந்தை பேறின்மை எனும், நிலை மாறி உள்ளது.அதேநேரம், பருவ வயதில் பெண்களை பற்றிய விஷயங்களை தேடி தேடி தெரிந்து கொள்ளும் ஆண்களில் பலர், உடல் ரீதியாக பெண்களுக்கு இயற்கையில் ஏற்படும் மாதவிடாய் கால மாற்றங்களை, இன்னும் புரிந்து கொள்ளாமல் உள்ளனர் என்பதும் நிதர்சனமான உண்மை.

பெண்களும், மாதவிடாய் நேரங்களில், அதிகப்படியான கோபத்தை, குடும்பத்தினர் மீதும், தன்னை சுற்றியுள்ள சமூகத்தின் மீதும் வெளிப்படுத்துகின்றனர் என்பதும், மறுக்க முடியாத ஒன்று.இயற்கையில் நிகழும் சாதாரண சுழற்சி என நினைத்து, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல், எப்போதும் போல், சக மனிதர்களுடன் இணைந்து, அன்றாட பணிகளை செய்தாலே, மாதவிடாய் காலங்களில், பெண்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளிலிருந்து, எளிதாக விடுபட முடியும்.
மூலிகை நாப்கின்களுக்கு பெண்களிடம் வரவேற்பு உள்ளதா?
கடந்த, 2016ல் தொழில் தொடங்கியபோது, ஒரு பாக்கெட் விற்பனை செய்வதே, பெரும் சவாலாக இருந்தது. தொடர்ந்து, என் தோழிகள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் வட்டத்தில், இதை, கொடுத்து விற்பனை செய்தேன். அவர்கள் வாயிலாக, வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், ஐந்து ஆண்டுகளில், 2,000க்கும் மேற்பட்டோர், என்னிடம், இயற்கை மூலிகை சானிடரி நாப்கின்களை வாங்க தொடங்கி உள்ளனர்.

அதேபோல், இதைபயன்படுத்தியதால், பி.சி.ஓ.டி., கட்டிகளால் பாதிக்கப்பட்டிருந்த, 150க்கும் மேற்பட்ட பெண்கள்குணமடைந்துள்ளனர்.மூலிகை பொருட்கள் விலை அதிகம் என்பதால், தற்போது, ஒரு மூலிகை நாப்கின், 17 ரூபாய்க்கும், ஆறு நாப்கின் உள்ள, ஒரு நாப்கின் பாக்கெட் விலை, 130 ரூபாய்க்கும்விற்று வருகிறேன். எதிர்காலத்தில், வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்தால் மேலும், விலையை குறைக்க முடிவு செய்துள்ளேன்.
இயற்கை நாப்கின்கள் தேவைப்படுவோர், 97109 72097 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
27-மார்-202013:18:30 IST Report Abuse
pattikkaattaan உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள் சகோதரி .. இதுபற்றி மக்களிடம் இன்னும் போதிய விழிப்புணர்வு இல்லை.. இதையே ஏதாவது ஒரு முன்னணி நிறுவனம் தயாரித்திருந்தால், விளம்பரம் செய்து, கொள்ளை லாபம் சம்பாதிருப்பார்கள் .. வெற்றியடைய வாழ்த்துக்கள் ..
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
27-மார்-202011:38:06 IST Report Abuse
karutthu வாழ்த்துக்கள் பத்தாம் வகுப்பு வரை படித்த பெண்ணிற்கு இந்த அளவு அறிவியல் (Knowledge in Chemistry) ஞானமா நாட்டு மக்களுக்கு யார் நல்லது செய்தாலும் பாராட்டவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
BS GANESUN -  ( Posted via: Dinamalar Android App )
27-மார்-202010:12:52 IST Report Abuse
BS GANESUN really superb congratulations sister
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X