சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'கொரோனாவால் ஞானம்!'

Added : மார் 26, 2020
Share
Advertisement
 'கொரோனாவால் ஞானம்!'

'கொரோனாவால் ஞானம்!'

கோவை காந்திபுரம், மத்திய பஸ் நிலையத்தில், அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 'கொரோனா' தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, சமீபத்தில் நடந்தது.அப்போது, தன்னிடம் கை குலுக்க வந்த, போக்குவரத்து துறை அதிகாரி ஒருவருக்கு, அரசு போக்குவரத்துக்கழக, கோவை மண்டல, ஜி.எம்., மகேந்திரகுமார், இரு கைகளையும் கூப்பி, வணக்கம் தெரிவித்தார்.அவர் பேசுகையில், 'தமிழர்கள், சும்மாவா வணக்கம் சொல்லும் நடைமுறையை பின்பற்றினர். சாணம் பூசுவது, மஞ்சள் நீர் தெளிப்பது எல்லாம், ஒரு காரணத்துக்காகத் தான் என்பது, எல்லாருக்கும் இப்போ தெரியும்.'வெளிநாட்டினரும், இப்போது, வணக்கம் சொல்லும் நடைமுறையை பின்பற்றுகின்றனர். நம் பாரம்பரிய நடைமுறைக்கு பின், நிச்சயம்,அர்த்தமுள்ள காரணம் இருக்கும்' என்றார்.நிகழ்ச்சியில் பங்கேற்ற ஊழியர் ஒருவர், 'கொரோனா பீதியால, பலருக்கு, ஞானம் பிறந்திருக்கு...' என்றதும், சுற்றியிருந்தோர் சிரித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X