சிறப்பு பகுதிகள்

அக்கம் பக்கம்

புலம்ப வச்சுட்டாங்களே!

Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 புலம்ப வச்சுட்டாங்களே!

'ராகுலை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. ரொம்பவே மன வேதனையில் உள்ளார்' என, கவலையுடன் கூறுகின்றனர் காங்கிரஸ் பிரமுகர்கள். காங்கிரசின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த, மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, பா.ஜ.,வுக்கு தாவியதை, ராகுலால் ஜீரணிக்கவே முடியவில்லை. ராகுலும், ஜோதிராதித்யாவும், கல்லுாரியில் ஒன்றாக படித்தவர்கள். ராகுலின் தந்தையும், முன்னாள் பிரதமருமான ராஜிவும், ஜோதிராதித்யா சிந்தியாவின் தந்தை மாதவ்ராவ் சிந்தியாவும் நெருங்கிய நண்பர்கள். இதனால், இருவரது குடும்பத்தினரும் நீண்ட காலமாகவே நட்புடன் இருந்து வந்தனர். ராகுல், காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டபோது, அவருக்கு பெரும் பக்க பலமாக இருந்தவர் ஜோதிராதித்யா தான். அரசியல் ரீதியாக ராகுலுக்கு, பல ஆலோசனைகளையும் கூறி, அவரை ஊக்குவித்தார். அவர், பா.ஜ.,வுக்கு தாவுவார் என, ராகுல், கனவிலும் எதிர்பார்க்கவில்லை.சமீபத்தில், பார்லிமென்ட் வளாகத்தில், ராகுலை, தேசியவாத காங்., - எம்.பி., சுப்ரியா சுலே சந்தித்தபோது, தன் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் ராகுல். 'என் நெருங்கிய நண்பர்கள் கூட, பணத்துக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டு, கட்சியை விட்டு வெளியேறினால், யாரைத் தான் நம்புவது சொல்லுங்கள் பார்க்கலாம்' என, கண் கலங்கியுள்ளார். சுப்ரியாவுக்கு, தர்மசங்கடமாக போய் விட்டது. 'என்ன தான் இருந்தாலும், ஜோதிராதித்யா, ராகுலை இப்படி புலம்ப வைத்திருக்கக் கூடாது' என, ஆதங்கப்படுகிறார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
27-மார்-202020:00:36 IST Report Abuse
r.sundaram ஸிந்க்கியாவுக்கு பணம் வேண்டாம். அவர் எதிர்பார்த்தது தகுதி உள்ள பதவி. அதுவும் சம்பாதிக்க அல்ல, சேவை செய்ய. அவரிடம் இல்லாத பணமா? அவர் அரச பரம்பரை. பணத்துக்காகவே முதல்வர் பதவி கமல்நாத்துக்கு கொடுக்கப்பட்டது என்பது வெட்ட வெளிச்சம். மேலும் ராஜ்யசபா சீட் கூட இல்லை என்றவுடன் அவர் மனம் மாறினார். மேலும் கட்சிக்காக தேர்தலில் பாடுபட்டு வேலை செய்தவருக்கு எந்த ஒரு மரியாதையும் கொடுக்கப்பட வில்லை. தெருவில் இரங்கி வேலைப்பார் என்று சொல்லப்பட்டது. அவர் மனம் மாறியதில் எந்த ஒரு தப்பும் இல்லை. தப்பு பூராவும் காங்கிரஸ் மேலிடத்தின் மேலும், கமல்நாத் மேலும்தான்.
Rate this:
Share this comment
Cancel
karutthu - nainital,இந்தியா
27-மார்-202012:58:23 IST Report Abuse
karutthu ராகுல் அதுக்கு ஒத்து வரமாட்டார் என நினைத்து பி ஜே பி ல் சேர்ந்து விட்டாரோ ?
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
27-மார்-202002:39:02 IST Report Abuse
 nicolethomson ஜோதிராதித்தியா இந்த நிலையை எடுத்ததற்கு என்ன காரணம் என்று கூட உணராத ராகுல் தத்தி தான் என்று புரிந்து கொள்ள முடிகிறது , இப்போ சூலே கிட்ட சிம்பதி கிரியேட் பண்ணிட்டு இருக்கான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X