சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'பாராட்ட வேண்டும்; மனித நேயம் மறையவில்லை...' என, கூறத் தோன்றும் வகையில், தமிழக அரசு அலுவலக உதவியாளர்கள் சங்கத் தலைவர் கணேசன் அறிக்கை: கொரோனா பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், எங்களின், 2.44 லட்சம் பணியாளர்களின் ஒரு நாள் சம்பளத்தை அரசுக்கு வழங்க தயாராக உள்ளோம். இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தியுள்ளோம்.


'கொரோனா விவகாரத்தில், சினிமா நட்சத்திரங்கள் பல விதங்களில் முன்னுதாரணமாகவே இருக்கின்றனர்...' என, பாராட்டத் தோன்றும் வகையில், நடிகை ஸ்ருதி பேட்டி: மும்பையில் நான் ஒரு, 'பிளாட்'டில் என்னை நானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அதுபோலவே, என் அம்மா சரிகாவும், தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சென்னையில் ஒரு வீட்டில், என் தந்தை கமலும், இன்னொரு வீட்டில் என் தங்கை அக் ஷராவும் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். சமுதாயம் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த நடவடிக்கை.


'வணிகர்களுக்கு அரசு பல சலுகைகளை வழங்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கை நியாயமானதே...' என, சொல்லத் தோன்றும் வகையில், வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா அறிக்கை: தமிழக அரசின் உத்தரவுக்கு இணங்கியுள்ள வணிகர்களுக்கு சில சலுகைகளை அரசு செய்ய வேண்டும். குறிப்பாக, வரிச்சலுகை, கட்டணம் செலுத்த அவகாசம் போன்ற அடிப்படை சலுகைகளை வழங்க வேண்டும்.


'பாதுகாப்பு உடைகள் தரமாக இல்லை என, பொத்தாம் பொதுவாக கூறாமல், ஆதாரங்களுடன் சொன்னால், அரசு ஏற்றுக் கொள்ளுமே...' என, அறிவுரை கூற வைக்கும் வகையில், அ.ம.மு.க., தலைவர் தினகரன் அறிக்கை: கொரோனாவுக்கு எதிரான சுகாதாரப் பணிகளில் ஈடுபட்டுள்ள சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு உடைகள் தரமாக இல்லை என கூறப்படுகிறது. அதை தரமாக வழங்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


'நீங்கள் கோருவது சரி தான். இதில், அரசும் கவனம் செலுத்தி வருவதாக தெரிகிறது...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி அறிக்கை: மாநிலத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் சிறப்பு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும். அனைத்து மருத்துவ பணியாளர்களுக்கும், சிறப்பு நோய் பாதுகாப்பு கருவிகள் வழங்க வேண்டும்.


'வில்லன் நடிகராக இருந்தாலும், உங்கள் மனம், மிகவும் மென்மையாக இருக்கிறதே...' என, பாராட்டத் தோன்றும் வகையில், நடிகர் பிரகாஷ் ராஜ் அறிக்கை: என் வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என பார்த்தேன். என் அலுவலகம், வீடு, அறக்கட்டளை போன்றவற்றில் பணியாற்றும் அனைவருக்கும், மே மாதம் வரையிலான சம்பளத்தை முன்கூட்டியே வழங்கி விட்டேன். என் படங்களில் பணியாற்றி வரும் தினக்கூலி பணியாளர்களுக்கு, பாதி சம்பளத்தையாவது வழங்க முயற்சிப்பேன்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X