சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

சபாநாயகர் தொகுதியில் மந்தமான சாலை பணிகள்!

Added : மார் 26, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 சபாநாயகர் தொகுதியில் மந்தமான சாலை பணிகள்!


சபாநாயகர் தொகுதியில் மந்தமான சாலை பணிகள்!

அன்வர்பாய் வீட்டில், நண்பர்கள் ஜமா சங்கமித்தது. அவரது வீட்டு ஏலக்காய் டீயை பருகியபடியே, ''நம்ம அரசு அதிகாரிகள் எவ்வளவு சுறுசுறுப்பா இருக்காங்க, பாருங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார், அந்தோணிசாமி.''கொரோனா தடுப்பு நடவடிக்கையில, அவங்க தான் சுறுசுறுப்பா இருக்காங்களே பா...'' என்றார், அன்வர்பாய்.''நான் சொல்றது வேற விவகாரம்... தமிழக காங்கிரசின் மூத்த தலைவர், குமரி அனந்தனின் உதவியாளர் பாஸ்கரின் தந்தை, 2002ம் வருஷம் இறந்து போனாருங்க... ''அவரது இறப்பு சான்றிதழ் கேட்டு, 2014ல, ராமநாதபுரம் இணை சார் பதிவாளர் அலுவலகத்துல, பாஸ்கர் மனு குடுத்தாருங்க...''அந்த மனு மீது நடவடிக்கை எடுக்க, 'ரிக்கார்டு கிளர்க்' தாமதப்படுத்தியிருக்கார்... அவர் மீது, சார் பதிவாளரிடம் பாஸ்கர் புகார் குடுத்திருந்தாருங்க... ''இப்ப, 'இந்த புகார் பத்தி விசாரிக்கணும், வாங்க'ன்னு, போன, 23ம் தேதி, பாஸ்கருக்கு நோட்டீஸ் வந்திருக்குங்க...''ஆறு வருஷமா மனுவை ஊறப் போட்டுட்டு, இப்ப, கொரோனா பீதியால, நாடே முடங்கிக் கிடக்கிற சூழல்ல, சென்னையில இருக்கிறவரை, ராமநாதபுரம் வான்னு அழைச்சா எப்படின்னு, பாஸ்கர் நொந்து போயிட்டாருங்க... ''இது சம்பந்தமா, முதல்வர் தனிப்பிரிவுல புகார் குடுத்துட்டு வந்திருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.''ரெண்டா இருந்த கோஷ்டி, மூணாகிடுத்து ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு தாவினார், குப்பண்ணா.''எந்தக் கட்சியில வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''நீலகிரி மாவட்ட, அ.தி.மு.க.,வுல, முன்னாள் எம்.பி., அர்ஜுனன், இப்போதைய மாவட்டச் செயலர் புத்திச்சந்திரன்னு ரெண்டு கோஷ்டிகள் இருக்கு... ''இதுல, குன்னுார், எம்.எல்.ஏ., சாந்தி ராமு, மூணாவது கோஷ்டியா, தனி ஆவர்த்தனம் பண்ணிண்டு இருக்கார் ஓய்...''இதனால, நொந்து போன தலைமை, இந்த மூணு கோஷ்டியிலயும் இல்லாத ஒருத்தரை, மாவட்டச் செயலராக்க யோஜனை பண்ணிண்டு இருந்தது... ''கொரோனா குறுக்கே வந்துட்டதால, இப்போதைக்கு நியமனத்தை தள்ளி வச்சிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.''சபாநாயகர் தொகுதிக்கே இந்த கதியான்னு புலம்புறாங்க பா...'' என, கடைசி மேட்டருக்கு நகர்ந்தார், அன்வர்பாய்.''அவரது தொகுதியில என்ன வே பிரச்னை...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சபாநாயகர் தனபால், திருப்பூர் மாவட்டம், அவிநாசி சட்டசபை தொகுதியின், எம்.எல்.ஏ.,வா இருக்கார்... பேரூராட்சியில இருக்கிற சாலைகளை புதுப்பிக்கிற பணியை, சமீபத்துல, தனபால் பூமி பூஜை போட்டு துவங்கி வச்சாரு பா...''ஆனா, ஆரம்பிச்ச வேகத்துலயே பணிகளை கிடப்புல போட்டுட்டாங்க... ''காரணம் கேட்டப்ப, நிதி ஒதுக்கீடு சரியா வரலைன்னு சொல்றாங்க... 'சபாநாயகர் தொகுதியிலயே, இப்படி மந்தமா வேலைகள் நடந்தா, நாங்க யார்கிட்ட போய் புகார் பண்றது'ன்னு அப்பகுதி மக்கள் புலம்பிட்டு இருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.அரட்டை முடியவும், நண்பர்கள் கிளம்பினர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202013:28:19 IST Report Abuse
K.Prabhu, Coimbatore Oru naalaiku 2 times conversation iruntha nalla irukkumae.....
Rate this:
Cancel
A R J U N - sennai ,இந்தியா
27-மார்-202009:22:05 IST Report Abuse
A R J U N , 'இந்த புகார் பத்தி விசாரிக்கணும், வாங்க'ன்னு...இப்படித்தான் சைதாப்பேட்டை சார்பதிவாளர் ஆபீஸ் சென்று ர்ந்து வீடு கடன் முடிந்ததை குறித்து கேட்டேன்.லஞ்சமாக 2000 ரூ.type செலவுக்கு 1000 ரூ என கேட்டனர். CMCEEL புகார் அளித்து கேட்டதற்கு என்னை அவர்கள் ஆபீசுக்கு வரச்சொன்னார்கள். உருப்பட்ட மாதிரிதான் என போகவில்லை.ஏனனில் ஞாயம் கிடைக்காது/
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
27-மார்-202008:56:34 IST Report Abuse
கல்யாணராமன் சு. டீ கடை பெஞ்ச் மக்கள் ஏன் காணொளி மூலம் உரையாடக்கூடாது? விருந்தாளிகளை வீட்டில் இந்த காலத்தில் சேர்க்கவேண்டாம் அப்படினு அரசாங்கமே சொல்லியிருக்கே ........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X