பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : மார் 26, 2020
Share
Advertisement
 இதே நாளில் அன்று

மார்ச், 27, 1915 புஷ்பலதா தாஸ்.
அசாம் மாநிலம், லாகிம்பூர் என்ற இடத்தில், ராமேஸ்வர் --- சுவர்ணலதா தம்பதிக்கு மகளாகப் பிறந்தவர், புஷ்பலதா தாஸ்.காந்தியின் அழைப்பை ஏற்று, சுதந்திர போராட்டத்திற்காக, 6 வயதிலேயே, கதர் இயக்கத்தில், புஷ்பலதா பங்கேற்றார். தனிநபர் அறப்போராட்டத்தில் பங்கேற்று, இரண்டரை மாதம் சிறை சென்றார். போராட்டம் காரணமாக, பள்ளிப்படிப்பு பாதியில் நின்றதால், தனியே படித்து, ஆந்திரா பல்கலையில், அரசியல் பாடத்தில், முதுநிலை பட்டம் பெற்றார். 'மிருத்யு பாகினி, சாந்தி பாகினி' எனும் அமைப்பை ஏற்படுத்தி, சுதந்திர போராட்ட அறப்போரில் பங்கேற்றார்.காங்கிரஸ் சார்பில், 1951 - 1961 வரை, மேலவை உறுப்பினராக இருந்து, மக்களுக்கு தொண்டு செய்தார். 'வெகுமதியை எதிர்பார்த்து, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்கவில்லை. அதில், பங்குபெற வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியே போதுமானது' எனக் கூறி, தாமிர பத்திரத்தை பெற மறுத்தார். 2003 நவ., 19ம் தேதி இறந்தார்.வீரமங்கை, புஷ்பலதா தாஸ் பிறந்த நாள் இன்று!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X