பொது செய்தி

தமிழ்நாடு

காய்கறி மார்க்கெட்டாக மாறியது சங்கராபுரம் பஸ் நிலையம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

சங்கராபுரம் : சங்கராபுரம் பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட்டாக மாறியுள்ளது.சங்கராபுரத்தில் செயல்பட்டு வந்த உழவர் சங்தை கொரோனா அச்சத்தால் மூடப்பட்டது. ஆனால், சங்கராபுரம் உழவர் சந்தைக்கு சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களில் விளை பொருட்களான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.

உழவர் சந்தை மூடப்பட்டதால் கடந்த 2 நாட்களாக காய்கறி வியாபாரிகள் உழவர் சந்தைக்கு வெளியே சாலையை அடைத்தபடி வியாபாரம் செய்து வந்தனர்.இது தொடர்பாக காவல் துறை ஏற்பாட்டின் பேரில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கொட் நடத்த அனுமதிப்பது என தீர்மானித்து நேற்று 26ம் தேதி முதல் பஸ் நிலையத்தில் தற்காலிக காய்கறி மார்க்கெட் செயல்படத் துவங்கியது.

சங்கராபுரம் சுற்றியுள்ள 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்கள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.காலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை மட்டுமே காவல் துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சங்கராபுரம் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் அதிகாலையிலேயே சங்கராபுரம் பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கிச் சென்றனர்.சங்கராபுரம் பஸ் நிலையத்தில் செயல்படும் தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் அனைத்து காய்கறிகளும் சகாய விலையில் கிடைப்பதால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X