பொது செய்தி

தமிழ்நாடு

தியாகதுருகம் ஒன்றியத்தில் உதவி இயக்குனர் ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

தியாகதுருகம் : தியாகதுருகம் ஒன்றியத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை ஊராட்சிகள் உதவி இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.

தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளிலும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய பொருட்களை வாங்கச் செல்லும் மக்கள் சமூக இடைவெளியை பின்பற்றுகின்றனரா என்பதை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.இருசக்கர வாகனத்தில் தேவையின்றி வெளியே திரியும் நபர்களைக் கண்டறிந்து போலீசார் எச்சரித்து திருப்பி அனுப்புகின்றனர். ஆட்டோக்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.இந்நநிலையில், நேற்று நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கள்ளக்குறிச்சி ஊராட்சிகள் உதவி இயக்குனர் ரத்னமாலா ஆய்வு செய்தார்.

வடதொரசலுார் ஊராட்சியில் ரேஷன் கடையில் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்குகிறார்களா என்பதை ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து கிருமி நாசினி மருந்து தெளிக்கும் பணிகளை பார்வையிட்டார்.பி.டி.ஓ.,க்கள் வேல்முருகன், இந்திராணி, ஒன்றிய பொறியாளர் கோமதி, துணை பி.டி.ஓ., க்கள் ராஜேந்திரன், ஜெகநாதன், பணி மேற்பார்வையாளர் பச்சமுத்து ஊராட்சி செயலர் முத்துவேல் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X