பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் சுய உதவிக்குழுக்களைமிரட்டும் நிதி நிறுவனங்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

காரைக்குடி: காரைக்குடி பாப்பாஊரணி மகளிர் சுயஉதவிக்குழுவினரை, உடனடியாக பணத்தை கட்டுமாறு சில நிதிநிறுவனங்கள் மிரட்டுவதாக தெரிவிக்கின்றனர்.

காரைக்குடி பாப்பாஊரணி பகுதியை சேர்ந்த பெண்கள், மகளிர் சுயஉதவிகுழுக்கள் மூலம், நிதிநிறுவனங்களில் கடன் பெற்று மாதந்தோறும் தவணை செலுத்தி வருகின்றனர். நபர் ஒருவருக்கு, ஆயிரத்து ஐந்நுாறு, இரண்டாயிரம் ரூபாய் என தொகைக்கு ஏற்றவாறு தவணை செலுத்தி வருகின்றனர். தற்போது, மார்ச்சில் கட்ட வேண்டிய தொகையை செலுத்திய நிலையில், ஏப்ரல் மாதத்திற்கான தொகையை இப்போதே கட்டுமாறு நிதி நிறுவன ஏஜன்ட்கள் நெருக்கடி தருவதாக பாப்பாஊரணி பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.அப்பெண்கள் தெரிவிக்கையில்;தற்போது கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாகஇருந்த பணத்தை எல்லாம், அத்தியாவசிய பொருட்கள் வாங்கிவிட்டோம். கையில் பணம் இல்லை. இதுவரையிலும் முறையாக பணத்தை கட்டி வருகிறோம். மார்ச் தவணை கட்டிய நிலையில் ஏப்ரல் மாதத்திற்கான தவணைத் தொகையை உடனடியாக கட்டுமாறு ஏஜன்ட்கள் மிரட்டுகின்றனர். எங்களுக்கு உரிய கால அவகாசம் வேண்டும், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X