பொது செய்தி

தமிழ்நாடு

திருப்புத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் தற்காலிக மார்க்கெட்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 திருப்புத்துார் புதிய பஸ் ஸ்டாண்ட்   வளாகத்தில் தற்காலிக மார்க்கெட்

திருப்புத்துார்: திருப்புத்துார் தற்காலிக தினசரி மார்க்கெட் வசதியை புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் அமைப்பதன் மூலம் பொதுமக்கள் சமுதாய விலகலை கடைபிடிக்க வசதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

திருப்புத்துாரில் தினசரி மார்க்கெட் வசதி இல்லை. வாணியன் கோயில் மற்றும் அனுமன் கோயில் வீதிகளில் உள்ள காய்கறி, இறைச்சி,கோழிக்கறி கடைகள்மற்றும் உழவர் சந்தை மக்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன. இப்பகுதி தற்போதைய மக்கள் சமுதாய விலகலைக் கடைபிடிக்க முடியாத அளவிற்கு நெருக்கடியான இடத்தில் உள்ளது. தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும்காலையில் மக்கள் வருகை அதிகமாக காணப்படுகிறது.தற்போது உழவர் சந்தை காலை10:30 மணிக்கு மூடப்படுகிறது. இதனால் நெருக்கமாக மக்கள் உள்ளதைத் தவிர்க்க2 கடைகளுக்கு ஒரு கடை என்றும், நான்கடி தள்ளி பொதுமக்கள் நிற்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் நடைமுறையில் சிக்கல் உள்ளது. காரணம் உழவர் சந்தை மற்றும் தனியார் மார்க்கெட் பகுதி குறுகலாக இடத்தில் அமைந்துள்ளது.இதனைத் தவிர்க்க தினசரி மார்க்கெட்டை தற்காலிகமாக தற்போது கட்டப்பட்டுள்ள புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் நடத்தபேரூராட்சி முன் வரவேண்டும் என்பதே பலரின் கோரிக்கையாக உள்ளது. அங்கு நல்ல இடைவெளிவிட்டு கடைகள் நடத்தவும், மக்கள் தள்ளி நிற்கவும் விசாலமாக இடம் உள்ளது.

போலீசார்,வருவாய்த்துறை,சுகாதாரத்துறையினர்,உணவுத்துறையினர் முழுமையாக கண்காணிக்கவும் நியாயமான விலையில் விற்பனை நடக்கவும் வாய்ப்புள்ளது. தற்போது பக்கத்துக் கிராமங்களிலிருந்து காய்கறிகள் வரத்து குறைவாகியுள்ளது. அதனை மேம்படுத்தவும் தோட்டக்கலைத்துறையினர் மூலம் கூடுதல் நடவடிக்கை அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X