பொது செய்தி

தமிழ்நாடு

தடை உத்தரவு எதிரொலி கிராமப்புற சாலைகளும் மூடல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருப்புவனம்: நாடு முழுவதும் 144 தடை உத்தரவு காரணமாக மாநில, மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு வரும் வேளையில் கிராமப்புற சாலைகளும் மூடப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் வேளையில் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு வருகிறது. மாவட்டங்களுக்கு இடையே உள்ள எல்லைகளில் வாகனங்கள் சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.கிராமங்களுக்கு இடையேயான எல்லைகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது.இதனையடுத்து திருப்புவனம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 45 ஊராட்சி எல்லைகளும் மூடப்பட்டு வருகின்றன. ஒரு கிராமத்திற்கு நான்கு பாதைகள் இருந்தால் அவற்றில் மூன்று பாதைகள் அடைக்கப்பட்டு ஒரே பாதையில் உள்ளே வரவும் வெளியே செல்லவும் வகை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அறிமுகம் இல்லா நபர் வருகை தடுக்கப்படும், வெளிநபர்கள் மூலமாகவே கொரோனா வைரஸ் பரவி வருவதால் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பாதைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. திருப்புவனம் அருகே பெத்தானேந்தல் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு பாதைகள் அடைக்கப்பட்டு ஒரே பாதையில் கிராமமக்கள் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X