பொது செய்தி

தமிழ்நாடு

அவசர தேவைக்கு உதவும் பணியில் தன்னார்வலர்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : தடை உத்தரவால் வீடுகளில் முடங்கியுள்ள பொதுமக்களின் அவசர தேவைகளுக்கு, உதவும் பணியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கொரோனா பாதுகாப்பு 144 தடை உத்தரவால், பொதுமக்கள் தங்களின் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதனால் விழுப்புரம் நகரில் அவசர தேவைகளுக்காக பொதுமக்களுக்கு உதவும் வகையில், விழுப்புரம் கரிகால சோழன் பசுமை மீட்பு படை அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.இந்த குழுவினர், நேற்று முன்தினம் நகரைச் சேர்ந்த 13 பேருக்கு அவசர தேவைகளுக்கு மருந்து, மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தனர். மேலும், உடல் நலம் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.இதேபோன்று, இந்த குழுவினர் நகரில் உணவில்லாத மக்களுக்கு உணவுகள் வழங்குகின்றனர். இந்த குழுவினரின் பணி நகர மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X