குழாய் உடைப்பு: வீணாகும் குடிநீர்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி காந்திரோட்டில் சாலையோரம் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது.

ரிஷிவந்தியம் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருக்கோவிலுார், மணலுார்பேட்டை பகுதியிலிருந்து தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அவ்வாறு பெறப்படும் தண்ணீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் ஏற்றப்பட்டு, நகர பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தெருவாரியாக வழங்கப்படுகின்றன.ஆனால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் வழங்கப்படும் பூமிக்கடியில் புதைக்கப்பட்டுள்ள இந்த பைப் லைன் கள்ளக்குறிச்சி காந்தி ரோடு தபால் அலுவலகம் அருகே உடைந்து குடிநீர் அதிகளவில் வீணாகி வெறியேறுகிறது.

இதனால் வெகு தொலைவிலிருந்து கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் கிடைக்கும் தண்ணீர் பொதுமக்களுக்கு எந்தவித பயனும் இல்லாமல் அதிகாரிகளின் அலட்சியப்போக்கினால் வீணாகும் அவலம் தொடர்ந்து வருகிறது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பினை உடனடியாக சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X