சம்பவம் செய்தி

தமிழ்நாடு

16 பேர் மீது வழக்கு

Added : மார் 26, 2020
Share
Advertisement
 16 பேர் மீது வழக்கு

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் அருகே, தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற, 15 பேர் மீது, நேற்று முன்தினம் இரவு, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.அதேபோல், படாளம் கூட்டுச்சாலை அருகில், உணவகம் நடத்தியவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில், செக்போஸ்ட் அமைத்து, போலீசார் கண்காணித்து வருகின்றனர்.அவ்வழியாக, நேற்று வந்த ஆட்டோவை மறித்தனர். அதில், நெருக்கியபடி, 15 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின், தனியார் துப்புரவு பணியாளர்கள் என்பது தெரியவந்தது.இதையடுத்து, ஒரு ஆட்டோவில், 15 பேரை ஏற்றிவரக் கூடாது என, ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X