பொது செய்தி

தமிழ்நாடு

பணியாளர்களுக்காக அரசு பஸ்கள் இயக்கம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 பணியாளர்களுக்காக அரசு பஸ்கள் இயக்கம்

காஞ்சிபுரம்:மருத்துவ பணியாளர்களுக்காக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில், நேற்று ஐந்து அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.நாடு முவதும், ஊரடங்கு அமலில் உள்ளதால், அனைத்து போக்குவரத்தும் முற்றிலும் நிறுத்தப்பட்டது.
இதனால், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்கள், தங்கள் வீடுகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர்.இதையடுத்து, மருத்துவ பணியாளர்களை பணிக்கு அழைத்து வரவும், மீண்டும் வீட்டில் விடவும், அரசு உத்தரவிட்டது.மாவட்ட கலெக்டர் பொன்னையாவின் உத்தரவு படி, நேற்று காலை, காஞ்சிபுரம் பணிமனை சார்பாக, ஒரு பஸ் இயக்கப்பட்டது.திருப்புட்குழி, முசரவாக்கம், கீழம்பி போன்ற பகுதிகளுக்கு சென்று, மருத்துவமனை ஊழியர்களை அழைத்து வர, இந்த பஸ் இயக்கப்பட்டது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், ஐந்து பஸ்கள் இயக்கப்பட்டன.சென்னை கிண்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கல்பாக்கம், மதுராந்தகம் ஆகிய பகுதிகளுக்கு பஸ்கள் சென்றன.
இதில், பொது சுகாதாரம், பேரிடர் மேலாண்மை பணியாளர்கள் உள்ளிட்ட அரசு பணியாளர்கள் சென்றனர். காலை, 7:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பஸ் இயக்கப்படுகிறது.'அவசர உதவிக்காக, 13 ஓட்டுனர்கள், பணிமனையில் தயார் நிலையில் உள்ளனர்' என, போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X