பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் அதிரடி: விழுப்புரத்தில் அமைதி

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரத்தில் போலீஸ் கெடுபிடி அதிகரித்துள்ளதால், விழுப்புரம் மாவட்ட மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து மாவட்ட எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைத்து, போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நேற்று காலை முதல் மாவட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, பைக்கில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை மடக்கி அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினர்.

இதேபோன்று, மாவட்டத்தில் காய்கறி கடைகள், இறைச்சி கடைகள், மெடிக்கல்கள், பால் பூத், மளிகை கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறந்திருந்தன. பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களும் இயக்கப்படவில்லை. இதனால், மாவட்டத்தில் உள்ள சாலைகள் மற்றும் முக்கிய வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன.விழுப்புரம் மாவட்டத்தில் போலீசாரின் கெடுபிடி நடவடிக்கையால், பொதுமக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X