பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீவி., பென்னிங்டன் மார்க்கெட் மூடல் தெருக்களில் விற்க அறிவுறுத்தல்

Added : மார் 26, 2020
Share
Advertisement

ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட்டில் மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று முதல் மார்க்கெட் மூடப்பட்டு தெருக்களில் சென்று காய்கறிகள் விற்க அறிவுறுத்தபட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கும் வகையில் காய்கறி மற்றும் பலசரக்கு கடைகள் செயல்பட அனுமதிக்கபட்டிருந்தது. ஆனால் அதிகளவில் மக்கள் வந்து செல்வதால் நோய்தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டது.

இதில் ஸ்ரீவில்லிபுத்துார் பென்னிங்டன் காய்கறி மார்கெட்டில் கடைகள் ஒன்றுக்கொன்று நெருக்கமாகவும், அதிக மக்கள் வந்து செல்லும் வகையில் இருந்தது. இதுகுறித்து வருவாய் மற்றும் போலீஸ் அறிவுறுத்தியும் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்தமுடியவில்லை. இதனால் நோய் பரவும் அபாயம் உருவானது.இதையடுத்து பென்னிங்டன் காய்கறி மார்கெட்டை மூடவும் மக்களை தேடிசென்று தெருக்களில் தள்ளுவண்டிகள் மூலம் காய்கறிகள் விற்கவும் கடை உரிமையாளர்களுக்குவருவாய்துறைஅறிவுறுத்தியது. இதையேற்று இன்று முதல் பென்னிங்டன் காய்கறி மார்க்கெட் மூடப்படுகிறது. அதேநேரம் வெளியூர்களில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து, கடைகளில் வைத்துகொள்ள எவ்வித தடையும் இமில்லை என அறிவுறுத்தபட்டது.சாத்துா

சாத்துார் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி கமிஷனர் ராஜமாணிக்கம் தலைமையில் டவுன் இன்ஸ்பெக்டர் சுபக்குமார், சுகாதார அலுவலர் குமார், பொறியாளர் முத்து, காய்கனி மார்க்கெட் கடை பிரதிநிதிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க தினமும் காலையில் கிராமங்களில் இருந்து நுாற்றுக்கணக்கானோர் வருகின்றனர். இவர்கள் நெரிசலில் காய், கனி வாங்குகின்றனர். வாடிக்கையாளர்கள் மாஸ்க் அணியாது வருகின்றனர் இதனால் கொரோனா தொற்று பரவ வாய்ப்புள்ளது. இடைவெளிவிட்டு நிற்பதில்லை. இது அரசின் அறிவுறுத்தலுக்கு எதிராக இருப்பதால் உடனடியாக காய்கனி மார்க்கெட்டை மூட வேண்டும். லோடு வாகனங்களில் காய்கனி களை எடுத்து சென்று வீதிவீதியாக விற்பனை செய்து கொள்ளுங்கள் என இன்ஸ்பெக்டர் சுபக்குமார் கூறினார். இதை நகராட்சி அலுவலர்களும் வலியுறுத்தினர். 2 நாள் மட்டும் அனுமதிக்க வியாபாரிகள் கூறினர். கால அவகாசம் தரமறுத்த அதிகாரிகள் மக்கள் நடமாட்டத்தை கட்டுப் படுத்த வேறு வழியில்லை என்றனர். இதை தொடர்ந்து இன்று முதல் சாத்துார் காய்கனி மார்க்கெட் மூடப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதை தொடர்ந்து இனி தெருக்களில் நடமாடும் காய்கனி கடைகள் வர உள்ளது.ராஜபாளையம்ராஜபாளையம் ஏ.கே.டி.ஆர் காய்கறி சந்தை மூடப்பட்டு மாற்று ஏற்பாடாக மதுரை ரோடு அன்னப்பராஜா பள்ளி மைதானம், தென்காசி ரோடு மாரியம்மன் கோயில் எதிரே உள்ள திடல், சத்திரப்பட்டிரோடு சின்மயா ஜூனியர் பள்ளி அருகிலும் கடைகள் இன்று முதல் செயல்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X