பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வுகூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார். அமைச்சர் சண்முகம் தலைமை தாங்கி, பேசியதாவது:விழுப்புரம் மாவட்டத்தில், மொத்தம் 56 ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் 293 துணை சுகாதார மையங்களில் மொத்தமாக 2,109 படுக்கைகள் உள்ளன. இதில் 318 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. வெளி மாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த 113 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு நோய் அறிகுறிகள் ஏதேனும் உள்ளதா என 28 நாட்கள் வரை தொடர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் அனைத்து வகையான விழிப்புணர்வுகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், 200 வீட்டு காவலர்கள் மற்றும் 200 காவலர்கள் மாவட்டம் முழுவதும் 13 இடங்களில் சோதனைச் சாவடிகளில் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 5 நபர்களுக்கு மேல் பொது இடங்களில் கூட்டமாக எவரேனும் கூடியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்திலுள்ள 688 ஊராட்சிகளிலுள்ள மற்றும் 2,286 குக்கிராமங்களிலும், 2,782 துாய்மைக் காவலர்கள் மற்றும் 802 சுகாதார பணியாளர்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கை விழிப்புணர்வு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், 651 ஊராட்சி செயலர்கள் மற்றும் 1,565 மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் உட்பட 2,785 பணியாளர்கள் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.அனைத்து ஊராட்சிகளிலும் மினி டாடா ஏஸ் வாகனங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 146.11 லட்சம் டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 714 லிட்டர் லைசால் மற்றும் 1,886 லிட்டர் கைகளை சுத்தம் செய்யும் திரவம் மற்றும் 2,281 சோப்பு கட்டிகள், 7,500 முக கவசங்கள் விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட அனைத்து ஊராட்சிகளுக்கும் மற்றும் அனைத்து குக்கிராமங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் 3,62,576 துண்டு பிரசுரங்களும், 61,920 சுவரொட்டிகள் மற்றும் 61,920 ஒட்டுவில்லைகள் மூலம் பொதுமக்களிடம் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.விழுப்புரம் அரசு மருத்துவமனை கொரோனா வைரஸ் தனி சிகிச்சைக்கான சிறப்பு மருத்துவமனையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் உறவினர்களுடன் தொடர்பு கொள்ள வீடியோ கால் வசதி மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் அவசர அவசியம் கருதி 108 ஆம்புலன்ஸ்கள் இதற்காக தனியாக இயக்கப்பட்டு வருகிறதுஇவ்வாறு அமைச்சர் சண்முகம் பேசினார்.எஸ்.பி., ஜெயக்குமார், கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி சிங், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மகேந்திரன், ஆவின் சேர்மன் முருகன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., முத்தமிழ்செல்வன், இணை இயக்குநர் (சுகாதார பணிகள்) சண்முகக்கனி மற்றும் துணை இயக்குநர் செந்தில்குமார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X