பொது செய்தி

தமிழ்நாடு

களை கட்டுகிறது திருட்டு மது விற்பனை

Added : மார் 26, 2020
Share
Advertisement

சாத்துார்: கொரோனா பரவலை தடுக்க பிரதமர் மோடி ஊரடங்குக்கு உத்திரவிட்டுள்ளார். வைரசின் தீவிரம், பரவும் விதம் புரியாத பலர் இரு சக்கர வாகனங்களில் உலா வந்து போலீசாரிடம் வாங்கி கட்டி கொள்கின்றனர்.

இந்நிலையில் 21 நாட்கள் ஊரடங்குக்காக டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டுள்ளன. இதை பயன்படுத்தி கள்ள மார்க்கெட்டில் மது விற்பனை கன ஜோராக நடைபெற்று வருகிறது. 180 மி.லி., அளவு பிராந்தி, ரம் போன்ற மதுபானங்கள் ரூ.200 முதல் ரூ. 300 வரை அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. கிராமங்களில் சர்வ சாதாரணமாக மது விற்பனை நடக்கிறது. கூட்டமாக சிலர் மது பாட்டில்களை வாங்கிகொண்டு ஒன்றாக உட்கார்ந்து மது குடிக்கின்றனர். இதன் மூலம் வைரஸ் தொற்று வேகமாக பரவும் அபாயம் உள்ளது.

வேலைக்கு செல்லாமல் மது போதையில் உளறுவோரை பார்க்கும் சிறுவர்கள், இளைஞர்கள் கெட்டு போகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சட்டவிரோதமாக கள்ள மார்க்கெட்டில் மது பானம் பதுக்கி வைத்து விற்பவர்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X