பொது செய்தி

தமிழ்நாடு

நகரங்களை மட்டும் கண்காணிக்கும் அதிகாரிகள்; ஊரடங்கை அலட்சியப்படுத்தும் கிராமப்புற மக்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நகரங்களை மட்டும் போலீசார் கண்காணித்து வருவதால் கிராமப்புறங்களில் ஊரடங்கை மக்கள் அலட்சியப்படுத்தி வெளியில் சுற்றித் திரிவது அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனாவசியமாக வெளியே சுற்றுவதை போலீசார் கண்காணித்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.இருசக்கர வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்கள் கண்டறிந்து அவர்களை எச்சரித்து அனுப்புகின்றனர். சில இடங்களில் தோப்புக்கரணம் போட வைத்து நுாதன தண்டனை அளித்து வருகின்றனர். எதையும் பொருட்படுத்தாமல் அடிக்கடி வெளியே சுற்றி வருபவர்களை கண்டறிந்து பிரம்பால் அடித்து விரட்டுகின்றனர்.

இது அனைத்தும் நகரங்களில் மட்டுமே காணமுடிகிறது. நகரின் முக்கிய சாலை மற்றும் தெருக்கள் போலீசாரின் தீவிர கண்காணிப்பில் உள்ளது. இதற்கு எதிர்மாறாக கிராமப்புறங்களில் ஊரடங்கு உத்தரவை மக்கள் முறையாக பின்பற்றுகிறார்களா என்பதை போலீசாரும், அதிகாரிகளும் கண்டுகொண்டதாக தெரியவில்லை.பெரும்பாலான கிராமங்கள் வழக்கமான நிலையிலேயே இயக்கத்தில் உள்ளது. நோய் பரவும் அபாயத்தை உணராமல் அலட்சியமாக உள்ளனர். பொது இடத்தில் பலர் ஒன்றாக அமர்ந்து சீட்டாடுவது, ஆடு, புலி ஆட்டம் உள்ளிட்ட சூதாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலியான தெருக்களில் பைக்குகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோர் அமர்ந்து சுற்றி வருவதைக் காணமுடிகிறது. அதேபோல் வயல் வேலைகளும் வழக்கம்போல் நடைபெறுகிறது. களை பறித்தல், நாற்று நடவு உள்ளிட்ட பணியில் கும்பலாக பெண்கள் வேலைக்குச் சென்று வருகின்றனர்.இதனைத் தடுக்கும் வகையில் அந்தந்த ஊரில் பணியில் உள்ள வருவாய் ஆய்வாளர்கள், கிராம வருவாய் அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள், கிராம ஊழியர்கள் யாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தருவதில்லை. போலீசாரும், அதிகாரிகளும் தங்கள் அலுவலகம் அமைந்துள்ள ஊரைத் தவிர்த்து கிராம பகுதிக்கு ரோந்து செல்வதில்லை.இதனால், கிராமங்களில் விழிப்புணர்வின்றி கூட்டம் கூட்டமாக சுற்றி வருவது தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை அதிகாரிகள் தடுத்து கட்டுப்பாடுகளை கிராமப்புறங்களிலும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

-நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X