பொது செய்தி

தமிழ்நாடு

'பவர் ஸ்ப்ேரயர்' இயந்திரம் ஊராட்சிகளுக்கு வழங்கல்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 'பவர் ஸ்ப்ேரயர்' இயந்திரம் ஊராட்சிகளுக்கு வழங்கல்

உத்திரமேரூர்:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில், சுகாதாரத் துறை சார்பில், கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, ஒவ்வொரு ஊராட்சிக்கும் என, புதிதாக, கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம் வழங்கப்படுகிறது. உத்திரமேரூர் ஒன்றியத்தில், 73 ஊராட்சிகள் உள்ளன.இங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த, சிறிய மற்றும் பெரிய ஊராட்சிகளுக்கேற்ப, 2 மற்றும் 5 லிட்டர் கொள்ளளவு உடைய, 'பவர் ஸ்ப்ேரயர்' எனப்படும், கிருமி நாசினி தெளிப்பு இயந்திரம், புதிதாக வழங்கப்பட்டு உள்ளது.மேலும், 'லைசால்' கிருமி நாசினி திரவம் மற்றும் சானிடைசர் பாட்டில், முக கவசம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.முன்னதாக, ஊராட்சிகளில் உள்ள துாய்மை மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு, கிருமி நாசினி தெளிப்பு இயந்திரத்தை, பாதுகாப்பாக பயன்படுத்தும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X