சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பைக் மோதி காயமடைந்து சிகிச்சை பெற்றவர் சாவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

விக்கிரவாண்டி ; விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நடந்து சென்றவர், ஸ்கூட்டி மோதி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த பொன்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் புத்திரன், 75; விவசாய கூலி த்தொழிலாளி. இவர், கடந்த 14ம் தேதி காலை விக்கிரவாண்டி கடை வீதி, மெயின்ரோட்டில் சாலையோரம் நடந்த சென்றார். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டி ஓட்டி வந்தவர், புத்திரன் மீது மோதினார்.இதில், படுகாயமடைந்த புத்திரன், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவரை, , கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கையாக அவரை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தனர். வீட்டிலிருந்தபடி மருந்துகள் உட்கொண்ட அவர், நேற்று முன்தினம் இறந்தார்.இது குறித்த புகாரின் பேரில் விக்கிரவாண்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X