பொது செய்தி

தமிழ்நாடு

2ம் கட்டமாக கிருமி நாசினி தெளிப்பு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நகராட்சி சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 2ம் கட்டமாக டேங்க்கர் லாரி மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது.

கள்ளக்குறிச்சி நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒரு நாள் ஊரடங்கு நடத்தப்பட்ட 22ம் தேதி டேங்க்கர் லாரி மூலம் கிருமி நாசினி கரைசல் கலந்த மருந்து தெளிக்கும் பணி நடந்தது. அதேபோன்று தற்போது நகர பகுதிகளில் 2ம் கட்டமாக நேற்று பிரதான சாலைகள் மற்றும் தெருக்களிலும் கிருமி நாசினி தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.அத்துடன் துப்புரவு பணியாளர்கள் நகரின் சாலையோரங்களில் தேங்கிக்கிடந்த குப்பைகளை, முகக்கவசம், கையுறைகள் .உள்ளிட்ட போதிய தற்காப்பு கவசங்களுடன் அகற்றினர். இப்பணிகளை நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வக்குமார், பணி ஆய்வாளர் கோபிநாத் ஆகியோர் பார்வையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X