சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கை மீறிய 59 பேர் மீது நடவடிக்கை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுா: திருக்கோவிலுார் காவல் உட்கோட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி சுற்றித்திரிந்த 59 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருக்கோவிலுார் காவல் உட்கோட்ட பகுதிகளான திருக்கோவிலுார், திருப்பாலப்பந்தல், ரிஷிவந்தியம், பகண்டை, வடபொன்பரப்பி, மூங்கில்துறைப்பட்டு, மணலுார்பேட்டை, சங்கராபுரம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மீறி திரிந்த இருசக்கர வாகன ஓட்டிகள் 59 பேர் மீது வழக்குப் பதிந்து, வாகனங்களை பறிமுதல் செய்தனர்.இந்திய தண்டனைச் சட்டம் 279 (மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அல்லது காயம் அல்லது தீங்கு ஏற்படும் விதத்தில் வாகனத்தை ஓட்டுவது, சவாரி செய்வது) இந்திய தண்டனைச் சட்டம் 188 (பொதுப்பணியாளரால் முறைப்படி பிரகடனப்படுத்தப்பட்ட உத்தரவிற்கு கீழ்ப்படியாமை) இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 269 (உயிருக்கு ஆபத்தான ஏதாவது ஒரு நோயை தோற்றுவித்தல் அல்லது பரப்புதல்) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இவை நிரூபிக்கப்பட்டால் அபராதம் மற்றும் 6 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக நேற்று போலீசார் லத்தியை பயன்படுத்தாமலேயே ஊரடங்கு உத்தரவு முழுமையாக கடைபிடிக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X