சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுகாதார நிலையங்களில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

திண்டிவனம் : வானுார் மற்றும் தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா முன்னேற்பாடுகள் குறித்து எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு செய்தார்.

கொரோனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில், அனைத்து மாவட்டங்களிலும் சுகாதார முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.நேற்று அமைச்சர் சண்முகம் உத்தரவின் பேரில், வானுார் தொகுதியில் உள்ள தைலாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் வானுார் சுகாதார நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு செய்தார்.அப்போது, டாக்டர்கள் கொரோனா தொற்று நோயைத் தடுக்கும் வகையில் வார்டுகளில் செய்துள்ள பணிகள் குறித்து விளக்கினர்.

இதுவரை வானுார் தொகுதியில் நோய் தொற்று காரணமாக யாரும் அனுமதிக்கப்படவில்லை என்ற விளக்கத்தையும் தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் போது, தைலாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ஜெயப்பிரகாஷ், டாக்டர் தோனியா, வானுார் ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வின் போது, முதன்மை மருத்துவ அலுவலர் டாக்டர் கமலா, டாக்டர்கள் ஷீபா, விஷ்ணுபிரியா மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் கிளியனுார் கிளைக்கழக செயலர் சிவக்குமார், பிரபு, சுமன், மூர்த்தி, மாதவன், தியாகராஜன், உமாபதி, அழகுவேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X