பொது செய்தி

தமிழ்நாடு

தர்பூசணி வினியோகம் பாதிப்பு நஷ்டத்தால் விவசாயிகள் கவலை

Added : மார் 26, 2020
Share
Advertisement
 தர்பூசணி வினியோகம் பாதிப்பு நஷ்டத்தால் விவசாயிகள் கவலை

திருப்போரூர்:கொரோனா பாதிப்பால், தர்பூசணி ஏற்றுமதி இல்லாததால் அறுவடை பாதிக்கப்பட்டு விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர்.
திருக்கழுக்குன்றம் ஒன்றியம், இரும்புலிச்சேரி, எடையாத்துார் உள்ளிட்ட கிராமங்களில், ஆயிரக்கணக்கான ஏக்கரில், தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.போக்குவரத்து தடைதற்போது, கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், மாநில, மாவட்ட போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மொத்த வியாபாரிகள், விளை நிலங்களுக்கு வந்து கொள்முதல் செய்வதும், முழுமையாக தடைபட்டது.இதனால், விளைநிலங்களில் உள்ள தர்பூசணி, அறுவடை செய்யப்படாமல் முடங்கி உள்ளது. பல நிலங்களில், பழம் அழுகி, வீணாகி வரும் சூழலும் உருவாகியுள்ளது.இதனால், கடன் வாங்கி பயிரிட்ட விவசாயிகள், பெரும் நஷ்டத்தை சந்தித்து, மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.இது குறித்து, இரும்புலிச்சேரி விவசாயி டில்லி கூறியதாவது:கொரோனா பாதிப்பால், தர்பூசணி ஏற்றுமதி தடைபட்டுள்ளது. ஒரு டன், 10 ஆயிரம் ரூபாய் விற்றது. தற்போது, 1,000 ரூபாய்கு வாங்ககூட ஆள் இல்லை.நஷ்டம்ஆறு நாட்களாக அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி, விற்க முடியால் கிடக்கிறது. இதனால், விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தற்கொலை செய்துக்கொள்ளும் அளவிற்கு, தங்கள் நிலைமை உள்ளது.தர்பூசணி போன்ற விளை பொருட்களை அறுவடை செய்து, வாகனங்களில் எடுத்து செல்ல, அரசு அனுமதி வழங்கவும், விவசாயிகளுக்கு வேண்டிய நிவாரணம் வழங்கவும் வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X