பொது செய்தி

தமிழ்நாடு

சமூக இடைவெளியுடன் காய்கறி விற்பனை

Added : மார் 26, 2020
Share
Advertisement

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் காய்கறி மார்க்கெட் விற்பனை கடைகளுக்கு போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்து இருப்பதால் சமூக இடைவெளியுடன் விற்பனை செய்யப்படுகிறது.

திருக்கோவிலுாரில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காய்கறி விற்பனைக்கு போலீசார் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களான காய்கறி, மளிகை, மருந்து உள்ளிட்ட பொருட்கள் தடையின்றி கிடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதற்காக கடைவீதியில் இயங்கும் காய்கறி கடைகளை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கையாக, டி.எஸ்.பி., மகேஷ் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் செல்வம் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், உலகநாதன் மற்றும் போலீசார் காய்கறி விற்பனையாளர்களுடன் பேச்சு நடத்தினர்.

அதில், கூட்டம் கூடாமல் இருக்கவும், சமூக இடைவெளியை பின்பற்றி கொரோனா தடுப்பு நடவடிக்கையை கடைபிடிக்கும் வகையில் ஒரு நாளைக்கு 2 வியாபாரிகள் மட்டுமே கடை வைக்க வேண்டும், கடைக்கு முன்பாக சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில் ஒரு மீட்டருக்கு ஒருவர் வீதம் நிற்கும் வகையில் கோடு வரைந்து விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.அதன்படி நேற்று கடைவீதியில் 2 காய்கறி கடைகள் மட்டுமே திறக்கப்பட்டது. இதிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் ஒரு மீட்டர் இடைவெளியில் கோடு வரைந்து அதில் நின்று, மிக குறைந்த அளவிலான பொதுமக்கள் காய்கறி வாங்கிச் சென்றனர்.புறநகர் பகுதிகளில், டாடா ஏஸ் வேனில் தெருக்களில் சிலர் காய்கறிகள் விற்பனை செய்தனர். இவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றியே விற்பனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X