தமிழ்நாடு

பொறுப்பற்ற முறையில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகள் 112 பேர் மீது வழக்குப்பதிவு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், அரசு உத்தரவுகளை மீறி பொறுப்பற்ற முறையில் சுற்றித் திரிந்த வாகன ஓட்டிகள் 112 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுமக்கள் பலர் அவ்வப்போது இரு சக்கர வாகனங்களில் செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.குறிப்பாக காலை நேரங்களில் சாலையில் அதிகளவில் இரு சக்கர வாகன போக்குவரத்தினை காணமுடிகிறது. போலீசார் நிறுத்தி விசாரிக்கும் போது மருந்து கடைகள், காய்கறிகள், மளிகை பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாக காரணங்களை கூறிவிட்டுச் செல்கின்றனர்.

இதனால், சாலைகளில் இரு சக்கர வாகனம் மற்றும் கார்களின் போக்குவரத்து காணப்பட்டது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி நகரத்தின் நுழைவு வாயில்களான நீலமங்கலம் பைபாஸ் சாலை மற்றும் ஏமப்பேர் பைபாஸ் சாலை சந்திப்பு போன்ற இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வாகன ஓட்டிகளை திரும்பி அனுப்பினர்.நேற்று காலை 7:00 மணியளவில் நான்கு முனை சந்திப்பு பகுதியில் சாலையோரம் காய்கறிகள் விதிமுறைகளை மீறி விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டன.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், செல்வநாயகம் மற்றும் போலீசார் எச்சரித்து அனைத்து கடைகளையும் அப்புறப்படுத்தினர். தொடர்ந்து நான்கு முனை சந்திப்பு வழியாக சென்ற வாகன ஓட்டிகளை மடக்கி பிடித்து விசாரித்து அபராதம் விதித்து வாகனங்களை பறிமுதல் செய்தனர்.மேலும், வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மாவட்டத்தில் பைக்கில் சுற்றித்திரிந்த ௧௧௨ பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.இருப்பினும் வாகன ஓட்டிகள் தடையை மீறி சென்றது போலீசாரை எரிச்சலடைய செய்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X