பொது செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் அரசு மருத்துவமனை கொரோனா சிகிச்சைக்காக மாற்றம்

Added : மார் 26, 2020
Share
Advertisement

விழுப்புரம் : விழுப்புரம் அரசு மருத்துவமனை, கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, தமிழகத்தில் கொரோனாவிற்கு சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.அதன்படி, விழுப்புரம் நான்குமுனை சிக்னல் அருகே உள்ள அரசு மருத்துவமனை முழுக்க முழுக்க கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதை தொடர்ந்து, கொரோனா சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X