பொது செய்தி

தமிழ்நாடு

கண்டமங்கலம் ஒன்றியத்தில் எம்.எல்.ஏ., திடீர் ஆய்வு

Added : மார் 26, 2020
Share
Advertisement

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை வானுார் தொகுதி எம்.எல்.ஏ., சக்கரபாணி ஆய்வு செய்தார்.

கண்டமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக படுக்கை வசதியுடன் கூடிய தனி சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதனை சக்கரபாணி எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.தொடர்ந்து கண்டமங்கலம் பி.டி.ஓ., அலுவலகம், சுகாதாரத்துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை ஆய்வு செய்தார்.கண்டமங்கலம் பி.டி. ஓ.,க்கள் பிரபாகர், நடராஜன், சிறுவந்தாடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ஆர்த்தி, கண்டமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்பிரகாஷ், கண்டமங்கலம் வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., செயலர்கள் கண்ணன், ராமதாஸ், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழ்மணி, வெங்கடாஜலபதிஉடன் இருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X