பொது செய்தி

தமிழ்நாடு

கள்ளக்குறிச்சியில் டோல்கேட்கள் திறப்பு; கட்டணமின்றி சென்ற வாகனங்கள்

Added : மார் 26, 2020
Share
Advertisement

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாடூர், உளுந்துார்பேட்டை டோல்கேட்கள் திறக்கப்பட்டு, கட்டணம் வசூலின்றி இலவசமாக பயணிக்க அனுமதி வழங்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் கட்டணமின்றி சுலபமாக பயணிக்க முடிந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி, ஏப்ரல் 14ம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு மாநிலம் மற்றும் மாவட்ட எல்லைகளும் மூடப்பட்டன.அத்தியாவசிய போக்குவரத்து தவிர அனைத்து பொது போக்குவரத்தும் முற்றிலும் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், அனைத்து டோல் கட்டணங்களையும் ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

இதுபோன்ற பேரிடர் காலங்களில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை ஏற்படுத்தாமல் இருப்பதற்கு, நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் வரை டோல் கட்டணங்களை ரத்து செய்ய மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் நேற்று உத்தரவிட்டுள்ளது.இதனால் கள்ளக்குறிச்சி மாவட்ட பகுதிகளில் மாடூர், உளுந்துார்பேட்டை டோல்கேட்கள் முழுமையாக திறக்கப்பட்டு, மருத்துவ அவசரம் மற்றும் அத்தியாவசிய பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் கட்டண வசூலின்றி சென்று வந்தன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X