பொது செய்தி

தமிழ்நாடு

அலட்சியம்! 'கொரோனா' தொற்று குறித்து பொதுமக்கள்...சர்வ சாதாரணமாக வாகனங்களில் பயணம்

Added : மார் 26, 2020
Share
Advertisement
 அலட்சியம்! 'கொரோனா' தொற்று குறித்து பொதுமக்கள்...சர்வ சாதாரணமாக வாகனங்களில் பயணம்

காஞ்சிபுரம்:'கொரோனா' வைரஸ் குறித்து, போதிய விழிப்புணர்வு மற்றும் போலீசார் நடவடிக்கை குறைவாக இருப்பதால், காஞ்சிபுரத்தில், வாகன ஓட்டிகள் பலர், சர்வ சாதாரணமாக வாகனங்களில் செல்கின்றனர்.
நாடு முழுதும், ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனாலும், தேவையில்லாமல் சிலர், இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிகின்றனர், எச்சரிக்கைகாஞ்சிபுரம், மேட்டுத்தெருவில், நேற்று காலை, சாதாரண நாட்களில் செல்வதுபோல், பொதுமக்கள், இருசக்கர வாகனங்களில் சென்றனர்.அவர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். மருத்துவமனை, மருந்து கடை, வங்கி போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டும் எனக்கூறினர். இனிமேல், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது எனக்கூறி, எச்சரித்து அனுப்பினர்.அதேபோல், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த துாசி, மாமண்டூர், அப்துல்லாபுரம் போன்ற கிராம மக்களுக்கு காஞ்சிபுரம் தான் அருகில் உள்ளது. அவர்கள், அத்தியாவசிய பொருட்களை வாங்க, காஞ்சிபுரம் வருவது வழக்கம். கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டாலும், அதை சிலர் கண்டு கொள்ளாமல் வருகின்றனர்.
மக்கள் நடமாட்டம்
முக்கிய சாலைகளில், போலீசார் தடுப்பு ஏற்படுத்தி, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டாலும், பல காரணங்களை கூறி, சென்று வருகின்றனர். கிராம பகுதிகளிலும், மக்கள் நடமாட்டம் அதிகம் காண முடிகிறது.இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோரை, போலீசார் கட்டுப்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வரும் வேளையில், நமக்கு நாமே சுய கட்டுப்பாடுடன் இந்த ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும். இவ்வாறு அலட்சியம் செய்ய கூடாது என, சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.
மீன் பிடிக்கும் இளைஞர்கள்
ஸ்ரீபெரும்புதுார் சுற்று வட்டார வீதிகளில், பொதுமக்கள், சர்வ சாதாரணமாக, கூட்டம் கூட்டமாக நடக்கின்றனர். மளிகை மற்றும் காய்கறி கடைகளில், இடைவெளியின்றி நின்று பொருட்களை வாங்குகின்றனர். இளைஞர்கள், தெருக்களில் கிரிகெட் விளையாடுவது, ஏரி, குளங்களில் துாண்டில் போட்டு மீன் பிடிப்பது உள்ளிட்ட செயலில் ஈடுபட்டு வருகின்றனர். வாகனங்களில் வெளியே சுற்றும் பொதுமக்களை, போலீசார், பல முறை எச்சரித்தும், பொதுமக்கள் அலட்சியமாக வெளியே சுற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X