கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி

Added : மார் 27, 2020
Share
 கட்டுப்பாட்டு அறையில் மருத்துவர்கள் தீவிர பணி

செங்கல்பட்டு:செங்கல்பட்டில், கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு அறையில், 25 மருத்துவர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு மாவட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில், கொரோனா வைரஸ், 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது. இங்கு, 25 மருத்துவர்கள் உட்பட, 40க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். வெளிநாடுகளிலிருந்து, மாவட்டத்திற்கு வந்தவர்கள் பற்றிய கணக்கெடுப்பு மற்றும் மாவட்டத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை கண்டறியும் பணியில், அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.செங்கல்பட்டு, மதுராந்தகம், தாம்பரம் வருவாய் கோட்டத்தில் உள்ள, எட்டு தாலுகாக்களிலும், நாடு திரும்பியோரை கண்டறிந்து, அவர்களது வீடுகளில், 'நோட்டீஸ்' ஒட்டப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X