பொது செய்தி

தமிழ்நாடு

'மீன் விற்பனைக்கு தடை இல்லை

Added : மார் 27, 2020
Share
Advertisement

காசிமேடு:''காசிமேடில் மீன் விற்பனைக்கு தடை இல்லை,'' என, அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.
காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், மீன் விற்பனைக்கு தடை விதித்து, போலீசார் கடும் கிடுக்கிப்பிடிகளை செய்து வருகின்றனர். பொதுமக்கள் ஒரு சிலர் மட்டுமே, மீன் வாங்க உள்ளே அனுமதிக்கப்பட்டனர். நேற்று, 20க்கும் மேற்பட்ட படகில் இருந்து, மீன்களை இறக்க போலீசார் அனுமதிக்கவில்லை.மீன் விற்பனை செய்யலாம் என, அரசு அறிவித்துள்ள நிலையில், போலீசாரின் கடும் கிடுக்கிப்பிடியால், மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.தினமும் கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு ஏற்படுவதால், உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
இது குறித்து மீன்வளத் துறை அமைச்சர், ஜெயகுமார் கூறியதாவது:மீன், அத்தியாவசிய உணவுப் பொருளாக உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி, மீன்வளத் துறை அதிகாரிகள், போலீசார் சில கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர். அதை, பொதுமக்கள் ஏற்க வேண்டும்.காசிமேடில், மீன் விற்பனைக்கு எந்த தடையும் இல்லை; மீன்வளத்துறை அதிகாரிகளின் அனுமதி பெற்று மீன்களை விற்கலாம்; எடுத்து செல்லலாம். இது குறித்து, அவர்களுக்கு தகுந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X