சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உத்தரவு மீறியவர்கள் மீது வழக்கு

Added : மார் 27, 2020
Share
Advertisement

ஊரடங்கு உத்தரவு மீறிய, 10க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துஉள்ளனர்.
'கொரோனா' பரவலை தடுக்கும் வகையில், தமிழகத்தில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பொது இடங்களில், ஐந்து பேருக்கு மேல் கூடக்கூடாது என, போலீசார் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர்.இந்நிலையில், 144 தடை உத்தரவை மீறி, ஏழுகிணறு, போர்த்துகீசியர் தெருவில் உள்ள மசூதி முன்பு, நேற்று, 10க்கும் மேற்பட்டோர் கூடினர்.அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், அவர்களை கலைந்து செல்லுமாறு கூற, போலீசாருடன் அவர்கள் தகராறில் ஈடுபட்டனர்.இதுகுறித்து, ஏழுகிணறு போலீசார், அதே பகுதியைச் சேர்ந்த, சாகுல் அமீது உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்டோர் மீது, ஆபாசமாக பேசுதல், சட்ட விரோதமாக தடுத்தல், அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் கீழ், வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர், பஜார் சாலையில், டூ - வீலரில் சுற்றித்திரிந்த, எஸ்.கே.பி.புரத்தைச் சேர்ந்த அய்யப்பன், 21, ரோசரி சர்ச் சாலையைச் சேர்ந்த சூர்யா, 25, ஆகிய இருவர் மீதும், மயிலாப்பூர் போலீசார், வழக்கு பதிவு செய்து, இருவரது வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்
* ஜஸ்ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ், 30; இவர், நேற்று தன் இருசக்கர வாகனத்தில், சாந்தோம் மாதா சர்ச் சாலையில் சுற்றி திரிந்தார். அதே போல், சீனிவாசபுரத்தைச் சேர்ந்தவர்கள் கனகராஜ், 58, முருகன், 38, ஆகிய இருவரும், கடற்கரை அணுகு சாலையில், தேவையில்லாமல், அடிக்கடி சுற்றி திரிந்தனர்.அவர்களை, போலீசார் பலமுறை எச்சரிக்கை செய்தும், அலட்சியம் செய்ததால், பட்டினப்பாக்கம் போலீசார், மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டத்தில் போலீசார், வாகனங்கள் செல்ல அனுமதிக்காமல், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் வாகனங்களை மட்டும் போலீசார் அனுமதி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், சிலர் எவ்வித காரணமும் இன்றி, சாலையில் உலா வருகின்றனர்.இதையடுத்து, காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில், நேற்று காலை முதல், தேவையில்லாமல், வாகனங்களில் வருவோர், சாலையில் திரிவோர் மீது, வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.நேற்று மாலை வரை, 160 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், 120 வாகனங்களை பறிமுதல் செய்து உள்ளனர்.
காஞ்சிபுரம்செங்கல்பட்டு மாவட்டத்தில், வண்டலுார் அருகே, தடையை மீறி இருசக்கர வாகனங்களில் சென்ற, 15 பேர் மீது, நேற்று முன்தினம் இரவு, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.அதேபோல், படாளம் கூட்டுச்சாலை அருகில், உணவகம் நடத்தியவர் மீதும், போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
காஞ்சிபுரத்தில், இருசக்கர வாகனங்களில், தேவையில்லாமல் சுற்றித்திரிந்த, 22 பேரை பிடித்து, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
செங்கல்பட்டு நீதிமன்றம் அருகில், நேற்று வந்த ஆட்டோவை போலீசார் மறித்தனர். அதில், நெருக்கியபடி, 15 பேர் அமர்ந்திருந்தனர். அவர்களிடம் விசாரணை செய்ததில், செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையின், தனியார் துப்புரவு பணியாளர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, ஒரு ஆட்டோவில், 15 பேரை ஏற்றிவரக் கூடாது என, ஓட்டுனரை எச்சரித்து அனுப்பினர்
-நமது நிருபர் -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X