பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு உதவிக்கரம் நீட்ட அழைப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

மயிலாப்பூர்:மாநகராட்சி முகாம்களில் தங்கியுள்ள, ஆதரவற்றோர் மற்றும் வட மாநிலத்தவர்களுக்கு, நிவாரண பொருட்கள் வழங்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
வடமாநிலத்தவர்கள் மற்றும் மெரினா கடற்கரை, நடைபாதைகளில் இருந்த ஆதரவற்றோரை, மாநகராட்சியினர் அழைத்து வந்து, சமூக நலக்கூடங்களில் தங்க வைத்துள்ளனர்.இதில், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என, மயிலாப்பூர், காரணீஸ்வரர்பக்கோடா சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில், 150 பேர்; சி.பி.ராமசாமி சாலையில் உள்ள சமூக நலக்கூடத்தில், 52 பேர்.மந்தைவெளி சாலையில் உள்ள இரவு காப்பகத்தில், வழக்கமாக தங்குபவர்கள், 55 பேரும், தற்போது கூடுதலாக, 25 பேரும், தற்போது இருந்து வருகின்றனர்.இவர்களுக்கு, மாநகராட்சி சார்பில் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இங்கு தங்கியுள்ளோருக்கு, அரிசி, பருப்பு, போன்ற அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி போர்வை, பாய், தலையணை, முக கவசம், கை கழுவ கிருமி நாசினி, நாப்கின், பிஸ்கட் பாக்கெட், கொசுவர்த்தி சுருள் போன்ற பொருட்களை வழங்க முன் வருபவர்கள், அந்த பகுதியில் உள்ள, மாநகராடசி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வழங்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.காரணீஸ்வரர் பக்கோடா சாலை முகாமிற்கு, 70920 79740 என்ற மொபைல் எண்ணையும், சி.பி.ராமசாமி சாலை முகாமிற்கு, 94450 25923 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X