தமிழ்நாடு

அத்துமீறல்! புழல் ஏரியில் நடைப்பயிற்சி.... பொதுப்பணித்துறையினர் பூட்டு

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
அத்துமீறல்! புழல் ஏரியில் நடைப்பயிற்சி.... பொதுப்பணித்துறையினர் பூட்டு

சென்னை:தடையை மீறி, புழல் ஏரியில் நடைப்பயிற்சி செய்பவர்களை தடுக்க, நுழைவாயிலுக்கு, பூட்டு போடப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியின், உபரிநீர் வெளியேற்றும் மதகுகள் செங்குன்றத்தில் உள்ளன. இங்கிருந்து, புழல் நீரேற்றும் நிலையம் வரை செல்வதற்கு, ஏரியின் மேல் பகுதியில், தார்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சாலையில், அதிகாலை மற்றும் மாலை நேரங்களில், செங்குன்றம், புள்ளிலைன், வடகரை, கிராண்ட்லைன், காவாங்கரை, புழல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், நடைப்பயிற்சி செல்வது வழக்கம். இதற்காக, ஜி.என்.டி.,சாலையில் உள்ள ஏரியின் நுழைவாயில் கதவுகள்திறந்து வைக்கப்பட்டிருக்கும். கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என, பொதுமக்களுக்கு பிரதமர் மோடி, முதல்வர் இ.பி.எஸ்., அறிவுறுத்தி உள்ளனர்.

தமிழகத்தில், 144 தடை உத்தரவும் அமலில் உள்ளது. அதை மீறி, பலரும் நேற்று காலை, ஏரியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டனர். இதில், 50 வயதை கடந்தவர்கள் அதிகம். இத்தகவல், பொதுப்பணித்துறையினர் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து, அனைவரையும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் எச்சரித்து வெளியேற்றினர். பின்னர், இருசக்கர வாகனங்கள் கூட செல்லாதபடி, நுழைவாயில் கதவுகளுக்கு பூட்டு போடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-மார்-202018:55:10 IST Report Abuse
ஆப்பு வீட்டிலேயே நடை பயிலுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
சீனு,கூடுவாஞ்சேரி இது நாள் வரை வாக்கிங் போகாமல் வம்பு பேசித் திரிந்த கூட்டத்திற்கு வீட்டில் அடைப்பட வேண்டிய சமயத்தில் ஏதோ ஒலிம்பிக்கில் தங்கம் வெல்பவன் போல நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள். நாலு அடி அடித்தால் நடைபயிற்சி செய்யும் போது வராத வேகம் தாங்கள் தப்பிப்பதற்காக ஓடுவார்கள். இதுவே அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X