பொது செய்தி

இந்தியா

பொருளாதாரத்தை விட மனிதர்களுக்கு முக்கியத்துவம்: 'ஜி - 20' தலைவர்களிடம் மோடி வலியுறுத்தல்

Updated : மார் 27, 2020 | Added : மார் 27, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
G20,coronavirus,Modi,NarendraModi,PM,நரேந்திரமோடி,மோடி

புதுடில்லி: ''பொருளாதார இலக்குகளை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்பட வேண்டும்,'' என, 'ஜி - 20' நாடுகளின் தலைவர்களிடம், பிரதமர் மோடி வலியுறுத்தினார்.


latest tamil newsமேற்காசிய நாடான சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர், முகமது பின் சல்மான் தலைமையில், ஜி - 20 நாடுகளின் அவசரக் கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் நேற்று(மார்ச் 26) நடந்தது. இதில், துவக்க உரையாற்றிய, முகமது பின் சல்மான், கொரோனாவால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார். இதைத் தொடர்ந்து, கொரோனாவால், வளரும் நாடுகள் சந்தித்துள்ள சுகாதார பிரச்னைகள், பொருளாதார பாதிப்புகளுக்கு உதவ, உறுப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தார்.


latest tamil newsஇந்த சந்திப்பில் பிரதமர் மோடி பேசியதாவது: பொருளாதார இலக்குகளுக்கு நாம் முக்கியத்துவம் கொடுப்பதை விட, மனிதர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, ஒருங்கணைந்து செயல்பட வேண்டும். இப்போது, கொடூர தொற்று வியாதியால், உலகமே பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில், உலக சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டியது அவசியமாகியுள்ளது.


ஒருங்கிணைந்து பணியாற்றுவோம்


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலக நாடுகள், குறிப்பாக, ஏழை நாடுகள் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்த நெருக்கடியை குறைக்க, ஜி - 20 நாடுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். மக்களின் நலனுக்காக, உலகம் முழுதும் ஒன்றாக செயல்பட வேண்டும். மருத்துவ ஆராய்ச்சிகளை, அனைத்து நாடுகளும் சுதந்திரமாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு, பிரதமர் மோடி பேசினார்.


latest tamil news
பொது எதிரி


சீன அதிபர், ஜின்பிங் பேசியதாவது: கொரோனா வைரஸ், உலகளவில், இதுவரை இல்லாத அளவில், சுகாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து, சர்வதேச அளவில் போர் தொடுக்க வேண்டும். கொரோனா பரவலுக்கு எல்லைகள் கிடையாது. இது, நம் பொது எதிரி. இதற்கு எதிராக, நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.


latest tamil newsஇந்த சந்திப்பில், அமெரிக்க அதிபர், டொனால்டு டிரம்ப், ரஷ்ய அதிபர், புதின் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர். 'கொரோனா பரவுவதை தடுக்க இணைந்து செயல்படுவது என, ஜி - 20 நாடுகளின் தலைவர்கள் முடிவு செய்தனர். இந்த கொடிய பாதிப்பில் இருந்து மக்களை காக்க, உலக சுகாதார அமைப்பின் ஒத்துழைப்பை நாடுவது என, முடிவெடுக்கப்பட்டது. அதன் வழிகாட்டுதலின்படி, மருந்துகள், நோய் கண்டறியும் கருவிகள், சிகிச்சை, தடுப்பு மருந்து, மற்ற மருந்துகள் போன்றவற்றை பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வினியோகிப்பது.

பாதிப்பு குறைவான நாடுகள், அதிக அளவில் உதவுவது என, முடிவு செய்யப்பட்டது. ஜி - 20 அமைப்பில், அர்ஜென்டினா,ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், இந்தியா, இந்தோனேஷியா. இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்ரிக்கா, தென் கொரியா, துருக்கி, பிரிட்டன் மற்றும் அமெரிக்கா இடம்பெற்றுள்ளன. இதைத் தவிர, ஐரோப்பிய யூனியனும் இடம்பெற்றுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
27-மார்-202012:18:17 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் பொருளாதாரம் தாரம் தரம் நல்ல சொற்கள்
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202009:56:59 IST Report Abuse
Tamilan இந்தியா போன்ற நாடுகளில் அபரிமித மனித சக்திகள் இருப்பதாலும், யார்வேண்டுமானாலும் தனித்தனியாக பேரம் பேசி விலைக்கு வாங்கி செல்லலாம் என்பதாலும், மனிதர்களுக்கு உண்டான மதிப்பு மறைக்கப்படுகிறது. பூமிக்கடியில் கொட்டிக்கிடக்கும் குப்பை கூளங்களை விட, மனிதர்களால் கண்டுபிடிக்கப்படும் பொருள்களை விட, குறைத்து மதிப்பிடப்படுகிறது. மேலும், பணத்தின் மதிப்பை, அளவை, கணக்கிட்டு அளந்து புள்ளிவிபரமாக தெரிவிக்க முடிவதுபோல், மனிதர்கள் எவ்வளவு மரியாதையை சம்பாதித்து வைத்துள்ளார்கள், அடுத்தவர்களை எந்த அளவுக்கு மதிக்கிறார்கள், மனிதர்களுக்கு உண்டான மதிப்பு எவ்வளவு, எதனை பேர் எவ்வளவு பெரிய ஏமாளிகள், கோமாளிகள் என்றெல்லாம் கணக்கிட்டு, அளக்கமுடியாததும், பணத்தை போல் கணக்கிட்டு அளந்து புள்ளிவிபரமாக தெரிவிக்க முடியாததற்கு ஒரு காரணமாக இருக்கலாம். போக மனிதர்களின் மதிப்பு தெரியாதவர்கள் மற்றும் மதிப்பில்லாத மனிதர்களின் ஆதிக்கத்தில் உலகம் இருப்பதாலும், மனிதர்களுக்கு உண்டான மதிப்பு மறைக்கப்படுகிறது .
Rate this:
Share this comment
Cancel
Tamilan - NA,ஐக்கிய அரபு நாடுகள்
27-மார்-202009:44:21 IST Report Abuse
Tamilan இது ஒன்றும் புதிதல்ல . மனிதர்களை மதிப்பதால் தான் நிறைய இந்தியர்களை இவர்கள் வேலைக்கு வைத்துள்ளார்கள் . ஆனால் , மனிதர்களை ஆங்காங்கே பேரம் பேசி ஒரு மிக சிறிய விலை கொடுத்து வாங்கிவிட்டு(சம்பளத்திற்கு அமர்த்தி ), வரிகளை துச்சமாக மதித்து , அவர்களை வைத்து வியாபாரம் செய்து, மிக பெரிய லாபம் ஈட்டலாம் என்பதுதான் இவர்களின் திட்டம் . ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் ஒன்று . இவர் இப்படி கூறுவதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை ஏற்கனவே வளர்ந்துவிட்டதாக தம்பட்டம் அடித்துக்கொள்ளும் நாடுகள் . ஏற்கனவே நடப்பதை தவிர புதிதாக ஒன்றும் நடக்காது .நாய் வாலை நிமிர்த்த முடியுமா ?. தெரியாதவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம் . தெரிந்தே நடிப்பவர்களுக்கு கற்றுக்கொடுக்க முடியாது . திருத்த முடியாது . இருப்பினும் , உலக அரங்கில் வெளிப்படையாக மாந்தர்களின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தது , மிக தைரியமான ஒன்று . இதை, வரும் காலங்களில் , அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் .
Rate this:
Share this comment
27-மார்-202012:06:34 IST Report Abuse
ஆரூர் ரங்ஆமாம். சட்டத்தை துச்சமாக மதித்து கடத்தல், ஹவாலாவில் பிழைத்து வந்த குறிப்பிட்ட இனம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது புரிகிறது. இப்போது போராட்டங்களுக்கும் வழியில்லாததால் பிரியாணி சப்ளை நின்றுவிட்டது. உள்ளூர் தீவீரவாதிகளுக்கு ஊக்கமளிக்க தாய், இந்தொனெசியாவிலிருந்து ஆள் கூட்டிவந்தால் அவங்க அவங்களால முடிஞச கொரோனாவைக் கொண்டுவந்து நொகடிச்சிட்டாங்க. இனிமேல்பட்டு மூர்க்க ஆட்டம் செல்லாது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X