பொது செய்தி

தமிழ்நாடு

மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன :தினமலர் ஆர்.லட்சுமிபதி கோரிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement
 மக்களுக்காக பிரதமர் செய்ய வேண்டியது என்ன :தினமலர் ஆர்.லட்சுமிபதி கோரிக்கை

மதுரை : கொரோனா அச்சத்தில் ஊரடங்கில் உள்ள பொதுமக்களுக்கு செய்யவேண்டியது குறித்துபிரதமர் மோடிக்குதினமலர் சார்பில் கோரிக்கை விடப்பட்டுஉள்ளது.

பிரதமர் நேற்று முன் தினம் நாடு முழுவதிலும் உள்ள பத்திரிகையாளர்களிடம் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசினார். பின்னர் இரவு 8:40 மணிக்கு தினமலர் இணை நிர்வாக ஆசிரியர் டாக்டர் ஆர்.லட்சுமிபதியுடன் தனியாக அலைபேசியில் பேசினார்.கொரோனா வைரஸ் தாக்குதல் பற்றி நம்பகமான செய்திகளை பொதுமக்களிடம் எடுத்துச்செல்லும்தினமலர் பணியை பிரதமர் பாராட்டினார்.

பிரதமர் எடுத்து வரும் நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாகஅறிவித்த 21 நாள் ஊரடங்கு ஆகியவற்றை லட்சுமிபதி குறிப்பிட்டு பிரதமருக்கு நன்றியும் பாராட்டும்
தெரிவித்தார்.அப்போது தற்போதைய சூழ்நிலையில் மத்திய அரசு மக்களுக்கு செய்ய வேண்டியது பற்றிய யோசனைகளை தெரிவிக்குமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
அதை தொடர்ந்து கீழ்க்காணும் கோரிக்கைகளை மின்னஞ்சல் மூலம்பிரதமருக்கு அனுப்பினார்.
1. ஊரடங்கால் வேலையிழந்த தினக்கூலி பணியாளர்களுக்கு அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு ரூ.1,500ஐ தரவேண்டும்.
2. ஒரு மாதம் இலவசமாக அரிசி, பருப்பு ரேஷனில் வழங்க வேண்டும்.
3. வருமானவரி தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
4. வங்கி கடன், மாத தவணை வசூலிப்பதை 3 மாதம் தள்ளிவைக்க வேண்டும். ஒரு மாத தவணையை தள்ளுபடி செய்ய வேண்டும்.
5. வங்கிகள் வராக்கடன் என அறிவிப்பதை 90 நாளில் இருந்து 120 நாளாக மாற்ற வேண்டும்.
6. ஊரடங்கில் அத்தியாவசிய பொருட்களை கடைகளில் விற்கும் போது யாரும் கூடுதலாக வாங்கி பதுக்க அனுமதிக்கக்கூடாது. அனைவருக்கும் பொருட்கள் கிடைக்கஏற்பாடு செய்யவேண்டும்.
7. வங்கிகளுக்கு முதியவர்கள் செல்கின்றனர். அவர்கள் செல்வதை தடுக்க வங்கிகளையும் மூடுவதே நல்லது.ஏ.டி.எம்.,களை சுகாதாரமாக பராமரிக்கவேண்டும்.
8. கொரோனா பாதிப்பு சந்தேகம் உள்ளவர்களை தனிமைப்படுத்தி கவனிக்க மையங்கள் தேவைப்படும். அதற்கு தனியார் லாட்ஜ்களை அரசு பயன்படுத்த வேண்டும்.சிகிச்சைக்கு நாடு முழுவதும் தனியார் மருத்துவ மனைகளிலும் வார்டுகளை ஏற்படுத்த வேண்டும்.
9. தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு திட்டங்கள் (சி.எஸ்.ஆர்.) மூலமும் அரசு மேம்பாட்டு புனரமைப்பு பணிகளை செய்யலாம்.இவ்வாறு கோரிக்கை விடுத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X