பொது செய்தி

இந்தியா

ஆள் இல்லா உளவு விமானம் மூலம் மக்கள் நடமாட்டம் கண்காணிப்பு

Added : மார் 27, 2020
Share
Advertisement

புதுடில்லி :மத்திய அரசு அறிவித்துள்ள, ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் விதமாக, நாடு முழுவதும், 21 நாள் ஊரடங்கை, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். சில மாநிலங்களில், ஊரடங்கு உத்தரவை மீறி, இரு சக்கர வாகனங்களில் இளைஞர்கள் பலர், வேடிக்கை பார்ப்பதற்காக ஊர் சுற்றி வருகின்றனர்.மேலும் சில இடங்களில், மக்கள், வீடுகளை விட்டு வெளியேறி, பொருட்கள் வாங்குவதற்காக ஒரே இடத்தில் திரள்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.ஊரடங்கு உத்தரவை கண்டிப்புடன் அமல்படுத்த, மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழகம், பீஹார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், விதிமுறைகளை மீறுவோர் மீது, போலீசார் கடுமையான நடவடிக்கைளை எடுத்து வருகின்றனர்.தோப்புக்கரணம் போட வைப்பது, கைகளை துாக்கியபடி நிற்க வைப்பது, வாகனங்களை பறிமுதல் செய்வது போன்ற நுாதன தண்டனைகளை வழங்கிவருகின்றனர்.காஷ்மீரில், மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகளில், ஆள் இல்லா உளவு விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.இந்த உளவு விமானங்கள் அளிக்கும் தகவலை வைத்து, போலீசார், சம்பந்தபட்ட இடங்களுக்கு சென்று, விதிமுறைகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், வழக்கும் பதிவு செய்து வருகின்றனர்.அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு, போலீசார் இடையூறு ஏற்படுத்துவதாக, சில மாநிலங்களில் இருந்து புகார்கள் வந்துள்ளன. காய்கறிகள் ஏற்றிச் சென்ற வாகனத்தை தாக்கி சேதப்படுத்திய போலீஸ்காரர், டில்லியில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார்.இதையடுத்து, காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம் என, போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், பராய்ச் மாவட்டம், ரிஷியா என்ற இடத்தில். ஊரடங்கு உத்தரவை மீறி, கூட்டமாக கூடி, தொழுகை நடத்தியதாக, 1,520 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மேலும், மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறியதாக, 195 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மூன்று லட்சம் ரூபாய் அபராதமும் வசூலிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X