சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குரோஷியா சென்று திரும்பியவர் விதிமீறல்

Added : மார் 27, 2020
Share
Advertisement

திருவொற்றியூர்:தனிமைப்படுத்தப்பட்ட, குரோஷியா சென்று வந்த நபர், தடையை மீறி வெளியில் சுற்றித் திரிந்ததால், போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கையாக, வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்தவர்கள், நோய்த்தொற்று இல்லாவிடிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, மாநகராட்சி சுகாதார துறையினரால், தினசரி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.அதன்படி, திருவொற்றியூர், ஈசானி மூர்த்தி கோவில் தெருவைச் சேர்ந்த பழனி என்பவர், சமீபத்தில், குரோஷியா சென்று திரும்பியுள்ளார்.
கொரோனா நோய் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, தினசரி கண்காணிக்கப்பட்டு வந்தார்.நேற்று முன்தினம் மாலை, அவரை வீட்டில் காணவில்லை. விசாரித்ததில், உறவினர் வீட்டிற்கு சென்றதாக தெரியவந்தது. இது குறித்து, சுகாதார துறை அதிகாரிகள், திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மீண்டும், வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X