பொது செய்தி

தமிழ்நாடு

சித்த மருத்துவமனையில் சேவைகள் தற்காலிக நிறுத்தம்

Added : மார் 27, 2020
Share
Advertisement

தாம்பரம்:தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில், குறிப்பிட்ட சில, மருத்துவ சேவைகள், தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தாம்பரம் சானடோரியத்தில் உள்ள, தேசிய சித்த மருத்து நிறுவனத்திற்கு, தினமும், 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற வருகின்றனர்.இதனால், பொது மக்கள் கூடுவதை தடுக்க, மருத்துவமனையில் இன்று முதல், குறிப்பிட்ட சில, மருத்துவ சேவைகள் தற்காலிமாக நிறுத்தப்பட உள்ளன.
இது குறித்து, வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:கூட்டத்தை தடுக்க, 15 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்கள் மற்றும் சாதாரண காரணங்களுக்காக மருந்து வாங்க வருவோருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், தற்காலிகமாக நிறுத்தப்படுகின்றன.நீரிழிவு நோய், மதுமேக புண்கள், வாதம் தொடர்புடைய நோய்கள் உட்பட, முக்கிய நோய்களுக்கான சிகிச்சைகள், தொடர்ந்து வழங்கப்படும்.பொதுமக்கள், தனி நபர்களால் பரப்பப்படும் அல்லது சமூக வலைதளங்களிலும் வலம் வரும், ஆதாரமற்ற மருத்துவ குறிப்புகளை நம்ப வேண்டாம்.மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி, அரசு சித்த மருத்துவர்கள், பரிந்துரை செய்யும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X