இந்தியா

கொரோனா தடுப்பு பணி: நாராயணசாமி ஆலோசனை

Added : மார் 27, 2020
Share
Advertisement
 கொரோனா தடுப்பு பணி: நாராயணசாமி ஆலோசனை

காரைக்கால் : காரைக்கால் மாவட்டத்தில், 'கொரோனா' வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, முதல்வர் நாராயணசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ். கமலக்கண்ணன். கந்தசாமி முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் முதல்வர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் ஒருவருக்கு ஒருவர் இடைவெளி விட்டு அமர்ந்திருந்தனர். முன்னதாக, அலுவலக வாயிலில் வைக்கப்பட்டுள்ள தண்ணீரில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கைகளை நன்கு கழுவினர்.

இக்கூட்டத்தில், பொதுமக்கள் பாதிக்காத வகையில், அத்தியாவசிய பொருட்கள் மளிகை. பால். மருந்து உள்ளிட்டவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் 21 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தினார். தனியார் துறைமுகம் மூலம் ரூ.40 லட்சம் மதிப்பில் வெண்டிலேட்டர் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை முதல்வர் முன்னிலையில் வழங்கப் பட்டது.

பின் அரசு பொது மருத்துவமனையில், கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கும் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்கள் கீதாஆனந்தன். திருமுருகன். அசனா. ஜெயமூர்த்தி. கலெக்டர் அர்ஜுன் சர்மா, துணை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X