இந்தியா

'கொரோனா' பீதியால் கிராமத்தில் நுழைய தடை

Added : மார் 27, 2020
Share
Advertisement
 'கொரோனா' பீதியால் கிராமத்தில் நுழைய தடை

திருக்கனுார் : திருக்கனுார் அருகே கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்க, வெளியூர் நபர்கள் கிராமத்திற்குள் நுழைய கூடாது என பொதுமக்களே தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவுதை தவிர்க்க, புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், ஊரடங்கு உத்தரவை மீறி பொதுமக்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் அத்தியாவசிய தேவையின்றி பொது இடங்களில் சுற்றித் திரிந்து வருகின்றனர். இதனால், பாதுகாப்பு பணியில் உள்ள போலீசார் அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி, விரட்டுவதுடன், வழக்குப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், திருக்கனுார் அருகே தமிழகப் பகுதியான சித்தலம்பட்டு கிராம மக்கள், தங்கள் கிராமத்திற்குள் வெளியூர் நபர்கள் யாரும் நடைபாதையாகவும், வாகனங்கள் மூலமாகவும் உள்ளே வருவதை தடை செய்துள்ளனர். இதற்காக, கிராம எல்லைப் பகுதியில் ஊருக்குள் செல்லும் சாலையின் குறுக்கே கயிறு கட்டியும், முள் செடிகளை கொண்டும் தடுப்பு ஏற்படுத்தி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X