இந்தியா

கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்: கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement
 கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்: கொரோனாவை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை

புதுச்சேரி : ராஜ்பவன் தொகுதியின் பல்வேறு இடங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று நடந்தது.

கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை புதுச்சேரி அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, உள்ளாட்சித் துறை மூலமாகவும், சுகாதாரத் துறை மூலமாகவும் கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.ராஜ்பவன் தொகுதியில் புதுச்சேரி நகராட்சி மூலமாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று துவங்கியது. முதல்வரின் பார்லிமென்ட் செயலர் லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., முன்னிலையில், புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் கிருமி நாசினி தெளித்தனர்.

பெரிய அளவிலான சின்டெக்ஸ் டேங்குகளில் நிரப்பப்பட்ட கிருமி நாசினியை பைப் மூலமாக வீதிகளிலும், சாக்கடைகளிலும், வீடுகளின் மீதும் பீய்ச்சி அடித்தனர்.சின்னையாபுரம், வாழைக்குளம், ராஜகோபால் கிராமணி தோட்டம், முருகேச கிராமணி தோட்டம், நகராட்சி மற்றும் குடிசைமாற்று வாரிய குடியிருப்புகள், குருசுக்குப்பம் போன்ற பகுதிகளில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.'வைத்திக்குப்பம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் இன்று காலையிலும், குமரகுரு பள்ளம் மற்றும் நகரத்து வீதிகளில் மாலையிலும் கிருமி நாசினி தெளிக்கப்படும்' என, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X