பொது செய்தி

தமிழ்நாடு

கொடைக்கானலில் 'செல்லிங்' மது விற்பனை

Added : மார் 27, 2020
Share
Advertisement

கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானல் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த வாரம் மூடப்பட்டன. நேற்று முன்தினம் மாலை முதல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் வந்தன. இதனால் கொடைக்கானல் வெறிச்சோடியது.இந்நிலையில் கொடைக்கானல் நகர் மேல்மலை பகுதிகளான பூம்பாறை, மன்னவனூர், பூண்டி, கிளாவரை, கவுஞ்சி, தாண்டிக்குடி பகுதியில் சில்லரை மது விற்பனையில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். குவாட்டர் பாட்டில் ஒன்றுக்கு ரூ. 200 முதல் 220 வரை விலை வைத்து விற்கப்படுகிறது.அரசு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தி கூட்டம் கூட தடைவிதித்துள்ள நிலையில் மதுவிற்பனை ஜோராக நடக்கிறது. இதற்காக ஆங்காங்கே கிராமங்களில் மது பெட்டிகளை பதுக்கி வைத்துள்ளனர். நேற்று முன்தினம் லாரிகளில் டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் கூடுதலாக இறக்கப்பட்டன. இந்நிலையில் சில புரோக்கர்கள் மொத்தமாக நள்ளிரவில் வேறு இடங்களில் பதுக்கி வைத்துள்ளனர்.டி.எஸ்.பி., ஆத்மநாதன் கூறியதாவது: பூம்பாறையில் சிலர் மது விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் மூவரை விசாரிக்கிறோம். சட்ட விரோதமாக செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X