இந்தியா

மருந்து கடைகளுக்கு சுகாதார துறை எச்சரிக்கை

Added : மார் 27, 2020
Share
Advertisement

புதுச்சேரி : காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, டாக்டர் பரிந்துரை இன்றி, தன்னிச்சையாக மருந்து மாத்திரை வழங்கக் கூடாது என, மருந்து கடைகளுக்கு சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரியில் காய்ச்சல், சளி, வறட்டு இருமல் போன்ற, 'கொரோனா' அறிகுறிகளுடன் இருப்பவர்கள் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என சுகாதார துறை அறிவுறுத்தி வருகிறது.இந்த நிலையில் காய்ச்சல், சளி இருப்பவர்கள், தன்னிச்சையாக மருந்து கடைகளில் மாத்திரை வாங்கி உட்கொள்வதாக சுகாதாரத்துறைக்கு பல்வேறு புகார்கள் வந்தன.அதையடுத்து, மருந்து கடைகளுக்கு, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில், 'டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து மாத்திரை வழங்கக் கூடாது. இதுபோன்ற அறிகுறிகளுடன் வருபவர்களை, உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல அறிவுறுத்த வேண்டும். மீறினால், மருந்தகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' எனறு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X