பொது செய்தி

தமிழ்நாடு

பழநி காந்தி மார்க்கெட்டில் புதிய நடைமுறை

Added : மார் 27, 2020
Share
Advertisement

பழநி: கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக பழநி காந்தி மார்க்கெட்டில் புதிய நடைமுறையை செயல்படுத்த அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

திண்டுக்கல் பழநி காந்தி மார்கெட்டில் அத்தியாவசிய பொருட்களை வாங்க ஊரடங்கு உத்தரவு நடைமுறை படுத்தப்பட்ட பின்பும் தொடர்ந்து பழநி மற்றும் சுற்றுவட்டார மக்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் மக்களின் வருகையை கட்டுப்படுத்தவும் சீரான முறையில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யவும் காந்திமார்கெட் நடைமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.நேற்று முதல் காலை 8:00 மணி முதல் பகல் 12:00 மணி வரை மார்கெட் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மார்க்கெட் கடைகளில் முதல் நாள் பாதி கடைகள் மட்டுமே திறக்க வேண்டும். மற்ற கடைகள் அடைக்கப்படும். மறுநாள் மீதியுள்ள கடைகள் திறக்கப்படும். முதல் நாள் திறந்திருந்த கடைகள் அடைக்கப்படும்.இருநாட்களிலும் அருகருகே உள்ள கடைகளும், திறந்த கடைக்கு எதிரே உள்ள கடையும் ஒரே நாளில் திறக்கக் கூடாது. இச்சுழற்சி முறையில் தொடர்ந்து கடைபிடிக்கப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் அருகருகே கடைகளில் நின்று காய்கறிகளை வாங்குவதை தவிர்க்கவே இந்த ஏற்பாடு.மேலும் மார்க்கெட்டுக்குள் வரும்வழி, வெளியேறும் வழிகள் ஒருவழிப்பாதையாக மாற்ற வேண்டும். ரெகுலர் வாடிக்கையாளர்களிடம் போனில் விவரம் பெற்று பொருட்களை வழங்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கும், கடைகாரர்களுக்கும் ஒரு மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். வாகனங்களை அனுமதிக்க கூடாது. மார்க்கெட்டுக்குள் நுழையும்போதே கைகளை நன்கு கழுவிய பின்பே செல்ல வேண்டும். இதற்கான அறிவுறுத்தலை நகராட்சி ஆணையர் லட்சுமணன், தாசில்தார் பழனிசாமி மற்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X