பொது செய்தி

தமிழ்நாடு

பெட்டிக்கடையில் மது விற்பனை

Added : மார் 27, 2020
Share
Advertisement

வேடசந்துார்: வேடசந்துார் நாககோணனுாரை சேர்ந்தவர் செல்லப்பன் 50. அதே ஊரில் பெட்டிக்கடை வைத்துள்ளார். கொரோனா தாக்கம் காரணமாக 'டாஸ்மாக்' மதுக்கடைகள் மூடப்பட்ட நிலையில், மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து கடையில் வைத்து விற்பனை செய்துள்ளார். திண்டுக்கல் தனிப்படை போலீசார் திடீர் ஆய்வு செய்ததில், 750 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. செல்லப்பன் கைது செய்யப்பட்டார். இதேபோல் வேடசந்துார் தாலுகாவின் பல பகுதிகளிலும், சரக்கு விற்பனை தொய்வின்றி நடப்பதாக பொது மக்கள் புகார் தெரிவிக்கின்ற னர்.நத்தம்:

சேர்வீடு பகுதியில் சிந்தம்மாள் 45, மதுரை ரோடு பகுதியில் கனகராஜ் 27, என்பவரும் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிந்தது. இருவரையும் கைது செய்த நத்தம் போலீசார், அவர்களிடம் இருந்து 320 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X